புஷ்பா படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார் அல்லு அர்ஜுன். 'ஐகான் ஸ்டார்' என கொண்டாடப்படும் அவர், விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
தொடர்ச்சியாக பான்-இந்தியா படங்களில் பிஸியாக இருக்கிறார் அல்லு அர்ஜுன். அட்லீயுடன் 'ராக்கா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடனும் ஒரு படம் செய்ய திட்டமிட்டுள்ளார். இப்படி அடுத்தடுத்து பெரிய படங்களில் கமிட் ஆகும் அல்லு அர்ஜுன், எதிர்கால அரசியல் நுழைவுக்காக இப்போதே திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
26
ரசிகர் மன்றங்கள் மூலம் ரகசிய ஆபரேஷன்?
சமீப காலமாக, அல்லு அர்ஜுன் தனது ரசிகர் மன்றங்களை (Allu Arjun Fans Associations) வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக தகவல். வெறும் பட புரொமோஷன் மட்டுமில்லாமல், சேவைப் பணிகள் மூலம் மக்களிடம் செல்லும்படி ரசிகர் மன்ற தலைவர்களுக்கு ரகசியமாக உத்தரவுகள் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜய் தனது 'விஜய் மக்கள் இயக்கம்' மூலம் எப்படி அடித்தளம் அமைத்தாரோ, அதேபோல அல்லு அர்ஜுன் தனது 'அல்லு அர்ஜுன் ஆர்மி' (Allu Arjun Army) மூலம் களப்பணி செய்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
36
சொந்தக் கட்சியா? இல்லை ஆதரவா?
அல்லு அர்ஜுன் அரசியலுக்கு வந்தால், சொந்தக் கட்சி தொடங்குவாரா அல்லது ஏற்கெனவே உள்ள கட்சிக்கு ஆதரவு கொடுப்பாரா என்பதில் தெளிவில்லை. ஆனால், கடந்த தேர்தல்களின்போது சில வேட்பாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவித்து, தனது அரசியல் ஆர்வத்தை மறைமுகமாக வெளிப்படுத்தினார். இப்போது, மாநிலம் முழுவதும் உள்ள தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கினைந்த சக்தியாக மாற்றும் வேலைகள் நடப்பதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
அல்லு அர்ஜுனின் அரசியல் பிரவேசம் ஒரு பக்காவான திட்டத்துடன் நடப்பதாகப் பேசப்படுகிறது. அல்லு அர்ஜுனின் மாமனார் சந்திரசேகர் ரெட்டி, ஏற்கெனவே பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார். அவர் மூலம் சில வேலைகள் நடக்க வாய்ப்புள்ளது. மேலும், நடிகர் விஜய், ஜெகன் போல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளுடன் அல்லு அர்ஜுன் முன்னேறப் போவதாகவும் செய்திகள் பரவுகின்றன. சமீபத்தில் அவர் மும்பையில் பிரசாந்த் கிஷோரை சந்தித்துப் பேசியதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால், இந்த விஷயங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
56
எண்ட்ரி எப்போது இருக்கும்?
'புஷ்பா' படம் மூலம் பான்-இந்தியா ஸ்டாராக மாறிய அல்லு அர்ஜுனுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் கிரேஸ் உள்ளது. இந்த கிரேஸை பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு மட்டும் பயன்படுத்தாமல், அரசியல் ஆயுதமாக மாற்றினால் சிறப்பாக இருக்கும் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் கருதுகின்றன. சினிமா இமேஜ் வேறு, அரசியல் வேறு என்பதை உணர்ந்த ஐகான் ஸ்டார், அவசரப்படாமல், தரைமட்டத்தில் இருந்து ரிப்போர்ட் சேகரிப்பதாகக் கூறப்படுகிறது. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் நேரடியாக அரசியலில் நுழைவார் என்றும், அதுவரை வலுவான அடித்தளத்தை அமைப்பார் என்றும் பேச்சு அடிபடுகிறது.
66
அல்லு அர்ஜுன் டீம் கொடுத்த விளக்கம்
இந்த அரசியல் எண்ட்ரி குறித்த செய்திகளுக்கு அல்லு அர்ஜுனின் பி.ஆர். டீம் பதிலளித்துள்ளது. அல்லு அர்ஜுனின் தனிப்பட்ட மேலாளராகப் பணியாற்றும் சரத் சந்திரா, 'இந்த செய்திகளில் உண்மையில்லை' என சமூக வலைதளத்தில் பதிலளித்தார். ஒருபக்கம், 2034-ஐ இலக்காக வைத்து அல்லு அர்ஜுன் படங்களை வேகமாக முடிக்கப் பார்க்கிறார் என செய்திகள் பரவும்போது, பன்னி டீம் இப்படிச் சொல்வது ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எது எப்படியோ, அல்லு அர்ஜுன் நேரடியாகச் சொல்லும் வரை இந்த செய்திகளை நம்ப முடியாது. இப்போதைக்கு, அல்லு அர்ஜுனின் அரசியல் எண்ட்ரி ஒரு சோஷியல் மீடியா வதந்தியாகவே உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.