Allu Arjun's photo on the cover of The Hollywood Reporter India : ஹிந்தி சினிமாவில் அல்லு அர்ஜூன் ஏற்படுத்தி வரும் தாக்கத்திற்கு சிறந்த உதாரணமாக தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா அட்டைப்படத்தில் அல்லு அர்ஜூனின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது
'தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா’வில் அல்லு அர்ஜூன்
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தற்போது தனது கேரியரில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். புஷ்பா 2 திரைப்படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் பான் இந்தியா அளவில் ஒரு பெரிய ஸ்டார் ஆனார். புஷ்பா 2 திரைப்படம் பான் இந்தியா பாக்ஸ் ஆபிஸில் 1800 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரிய ஹிட் ஆனது. இதன் மூலமாக அல்லு அர்ஜூனின் கிரேஸ் நேஷனல் இல்ல, இண்டர்நேஷனல் அளவிற்கு செல்கிறது. புஷ்பா 2 படத்தில் அவர் கூட ஒரு வசனம் பேசியிருப்பார். அதில், புஷ்பா என்றால் நேஷனல் என்று நினைத்தாயா.. இல்லை.. இன்டர்நேஷனல் என்று. இப்போது அல்லு அர்ஜுனின் கிரேஸ் உண்மையில் சர்வதேச அளவிற்கு செல்கிறது.
24
ஐகான் ஸ்டாருக்கு மகுடம் சூடிய ஹிந்தி சினிமா!
அமெரிக்காவின் பிரபல சினிமா இதழான 'தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா’ அட்டையில் அல்லு அர்ஜுன் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டது. தெலுங்கு சினிமாவில் தேசிய விருது வென்ற முதல் நடிகர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரும் இவரே. அதுமட்டுமின்றி ரூ.1871 கோடி வரையில் வசூல் குவித்து இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்து கொடுத்த படமாக புஷ்பா 2 திகழ்கிறது. இந்த நிலையில் தான் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அல்லு அர்ஜுன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
34
'தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா’வில் அல்லு அர்ஜூன் – ஐகான் ஸ்டாருக்கு மகுடம் சூடிய ஹிந்தி சினிமா!
அல்லு அர்ஜுனுக்கு ஈகோ இல்லை என்பதை இந்த பேட்டியில் தெரிவித்தார். இவ்வளவு பெரிய ஸ்டார் அந்தஸ்து இருந்தும் எனக்கு ஈகோ இல்லை. ஏனென்றால் நான் ஸ்டார் ஸ்டேட்டஸை சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று அல்லு அர்ஜுன் தெரிவித்தார். இதே பேட்டியில் அல்லு அர்ஜூன் சந்தியா தியேட்டர் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததாக தெரிகிறது.
44
'தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா’வில் அல்லு அர்ஜூன் – ஐகான் ஸ்டாருக்கு மகுடம் சூடிய ஹிந்தி சினிமா!
அதேபோல் தனது வெற்றிக்கு முக்கிய காரணத்தையும் அல்லு அர்ஜுன் வெளிப்படுத்தினார். நான் எனது படத்தை ஒரு சாதாரண பார்வையாளரைப் போல பார்ப்பேன். அதனால் படத்தில், என்னில் உள்ள நெகட்டிவ்ஸ் தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. எனது வெற்றி ரகசியம் அதுதான் என்று அல்லு அர்ஜுன் தெரிவித்தார். சினிமாவில் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும் ரியல் லைஃபில் சிம்பிளாக இருப்பேன் என்று பன்னி தெரிவித்தார். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் சும்மா இருப்பேன். எந்த வேலையும் செய்ய மாட்டேன். அதுதான் எனக்கு ஓய்வு என்று பன்னி தெரிவித்தார். கர்வம் என் மனதில் இடமில்லை. இந்த பழக்கம் எனக்கு பிறக்கும்போதே வந்தது என்று அல்லு அர்ஜூன் தெரிவித்தார்.