Akhanda 2 Thaandavam Premiere Shows Cancelled : பாலகிருஷ்ணா நடித்த அகண்டா 2 படம் தொடர்பாக ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் பிரீமியர் ஷோக்கள் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த அகண்டா 2 படத்திற்கு வெளியீட்டிற்கு முன்பே பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 5-ல் உலகளவில் வெளியாகவிருந்த நிலையில், பிரீமியர் ஷோக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
25
பிரீமியர் ஷோக்கள், ரசிகர்களுக்கு ஏமாற்றம்
தயாரிப்பாளர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் பிரீமியர் ஷோக்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
35
நிதி சிக்கலில் தயாரிப்பாளர்கள்
தொழில்நுட்பக் கோளாறு என தயாரிப்பாளர்கள் கூறினாலும், நிதிச் சிக்கலே உண்மைக் காரணம் எனத் தெரிகிறது. 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம், ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு ரூ.28 கோடி பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
45
பிரீமியர் ஷோக்கள் ரத்து
ஈரோஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியதால், அகண்டா 2 வெளியீட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் பிரீமியர் ஷோக்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
55
ஓவர்சீஸில் எல்லாம் ஓகே
வெளிநாட்டு பிரீமியர்கள் திட்டமிட்டபடி நடக்கும். ஆனால் இந்தியாவில் டிசம்பர் 5 வெளியீடு சந்தேகத்தில் உள்ளது. தொழில்நுட்ப சிக்கல்களால் இந்திய பிரீமியர்கள் ரத்து என தயாரிப்பாளர்கள் ட்வீட் செய்துள்ளனர்.