அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் வலிமை (Valimai) திரைப்படம், பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக இருந்தது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
இயக்குனர்கள் பார்த்திபன், விஜய் மில்டன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் எச்.வினோத். இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியான சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
28
வித்தியாசமான கதையம்சத்தோடு உருவாகி இருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த எச்.வினோத், அடுத்ததாக கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கினார்.
38
இப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத்தந்தது. நேர்கொண்ட பார்வை ஒரு ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுத்து வெற்றி வாகை சூடினார் வினோத்.
48
இப்படத்தில் வினோத்தின் திறமையை பார்த்து வியந்துபோன அஜித், தனது அடுத்த படமான ‘வலிமை’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்தார்.
58
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் வலிமை திரைப்படம், பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக இருந்தது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
68
இதனால் சோகத்தில் இருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நடிகர் அஜித் மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளாராம். அதன்படி வருகிற பொங்கல் பண்டிகைக்கு தனது அடுத்த படமான தல 61 குறித்த அப்டேட்டை வெளியிட உள்ளாராம்.
78
வருகிற ஜனவரி 16-ந் தேதி தல 61 படத்திற்கு பூஜை போடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். மேலும் போனி கபூர் தயாரிக்க உள்ளார்.
88
தல 61 படத்தின் படப்பிடிப்பை வருகிற மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். படப்பிடிப்பை 6 மாதங்களில் நடத்தி முடித்து தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர பிளான் போட்டுள்ளனர். ஆனால் இதற்கெல்லாம் கொரோனா வழிவிடுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.