Ajith salary : யம்மாடியோ.... ‘வலிமை’ அஜித்துக்கு இத்தனை கோடி சம்பளமா? - லீக்கான விவரம்... ஷாக்கான ரசிகர்கள்

Ganesh A   | Asianet News
Published : Dec 24, 2021, 05:10 PM ISTUpdated : Dec 24, 2021, 05:12 PM IST

தமிழில் தயாராகி உள்ள வலிமை (Valimai) படத்தை தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர்.

PREV
17
Ajith salary : யம்மாடியோ.... ‘வலிமை’ அஜித்துக்கு இத்தனை கோடி சம்பளமா? - லீக்கான விவரம்... ஷாக்கான ரசிகர்கள்

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்.

27

மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

37

வலிமை (Valimai) படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழில் தயாராகி உள்ள இப்படத்தை தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

47

இந்நிலையில், வலிமை படத்திற்காக நடிகர் அஜித்குமார் (Ajithkumar) வாங்கிய சம்பளம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. 

57

அதன்படி இப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ.70 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. அவர் இந்த அளவு சம்பளம் பெறுவது இதுவே முதன்முறை என்றும் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

67

வலிமை படத்தை இயக்கிய எச்.வினோத் (H vinoth) தான் அஜித்தின் 61-வது படத்தையும் இயக்க உள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளார். 

77

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது. மேலும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வலிமை படத்தின் ரிலீசுக்கு பின் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!

Recommended Stories