Ajith
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கும் அஜித், படத்தின் 90 சதவீத காட்சிகளை நடித்து முடித்துவிட்ட போதிலும், 'வலிமை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, அதாவது கடைசியாக எடுக்க உள்ள சண்டை காட்சி ஒன்றை மட்டும் படக்குழு, வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக, அந்த குறிப்பிட்ட சண்டை காட்சியை எடுப்பது தாமதமாகிக்கொண்டே சென்றது.
இந்நிலையில் படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யா சென்றனர். அங்கு பிரம்மாண் டமான சேஸிங் காட்சியை 10 நாட்கள் படக்குழு படமாக்கியது. அதை முடித்துவிட்டு படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பிய நிலையில், நடிகர் அஜித்குமார் மட்டும் இன்னும் ரஷ்யாவிலேயே தங்கி உள்ளார். இதற்கான காரணமும் மிகவும் சுவாரஸ்யமானது தான்.
பைக் ரைடிங் பிரியரான அஜித், ரஷ்யாவில் சில பைக் ரசர்களுடன் சேர்ந்து, சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் ரைடு செய்ய உள்ளதாக கூறப்பட்டது. மேலும் இதுகுறித்த சில புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.
இதை தொடர்ந்து அஜித்தின் பாசத்தில் நெகிழ்ந்து போல் அவரது ரசிகர் கொடுத்த பரிசு பொருட்கள் குறித்த புகைப்படமும், வைரலாகி வருகிறது.
அஜித்தை பொறுத்தவரை மிகவும் மென்மையான மனிதர், தன்னால் முடித்த வரை அனைவர் மீதும் அன்பு காட்டுவதோடு, பலருக்கு உதவிகளையும் செய்து வருபவர்.
அஜித் நடித்து வந்த வலிமை ஷூட்டிங் ரஷ்யாவில் நடத்த போது, படக்குழுவினர் அனைவரையும் அலெக்ஸ் என்கிற ரஷ்யாவை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் தான் ஹோட்டலில் இருந்து பிக்கப் செய்து ட்ரோப் பண்ணுவது, மீண்டும் அவர்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அழைத்து வருவது போன்ற செயல்களை செய்துள்ளார்.
அப்போது இவருக்கு அஜித்துடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அஜித்தின் அன்பில் நெகிழ்ந்து போன அவர், சில பொருட்களை தன்னுடைய அன்பு பரிசாக அஜித்துக்கு கொடுத்துள்ளார்.
புகைப்படம் நன்றி: Pinkvilla
ajith
சில உள்ளூர் சாக்கலேட், அஜித்தின் பெயர் பொறுத்த ஒரு காஃபீ கப், மற்றும், 'கொலம்னா உங்களை நேசிக்கிறது, நீங்கள் ஒரு சிறந்த மனிதர் என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட கருப்பு நிற டி- ஷர்ட் இரண்டையும் கொடுத்துள்ளார். இந்த பரிசுகள் சிறிதாக இருந்தாலும் தலயை பொறுத்தவரை ரசிகரின் மனசு ரொம்ப பெருசுதான்.
புகைப்படம் நன்றி: Pinkvilla