விலகுகிறேன் என அறிக்கை விட்டுவிட்டு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கிய அஜித்!

First Published | Jan 11, 2025, 6:54 PM IST

நடிகர் அஜித், கார் ரேஸில் இருந்து விலகுகிறேன் என அறிக்கை விட்டு அறிவித்த நிலையில் தற்போது மீண்டும் ரேஸில் களமிறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Ajith Car Racing Latest update

கோலிவுட் திரை உலகின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித், நேற்று கொடுத்த பேட்டியில் கார் ரேஸில் பங்கேற்பதற்காக 9 மாதங்கள் சினிமாவில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று திடீரென துபாயில் நடக்க உள்ள 24 மணிநேர கார் ரேஸ் கலந்து கொள்ள வில்லை என்று அறிக்கை வெளியிட்டு தெரிவித்தார். ஆனால் தற்போது மீண்டும் கார் ரேஸில், கார் ஓட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Ajith participate 24h Dubai 2025

 அஜித் இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா ஆசிரிய பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த ஃபார்முலா 2  சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி உள்ளார். இதை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக, திரைப்படங்களில் நடித்து வந்ததால், கார் ரேஸை விட்டு விலகியதாக கூறினார். தற்போது 'ரேஸிங்' என்கிற அணியின் தலைவராக இருக்கும் அஜித், 24 மணிநேர போட்டியில் கலந்து கொள்ள தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
 

Tap to resize

Ajith Race Car Met Accident

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அஜித்தின் கார் சோதனை ஓட்டத்தின் போது... தடுப்பு சுவரில் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. ஆனால் அஜித் எந்த வித காயமும் இன்றி பத்திரமாக காரில் இருந்து வெளியேறினார். அஜித் நலமுடன் உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரும் வழக்கம் போல் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார்.
 

Ajith Statement

கடந்த சில மணிநேரத்திற்கு முன்னர் அஜித் அதிரடியாக இந்த 24 மணிநேர கார் பந்தயத்தில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியானது. அஜித் நலமுடன் இருந்தாலும், அஜித்தின் நல்லது கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அஜித் மீண்டும் 24 மணிநேர கார் ரேஸில் கலந்து கொண்டு கார் ஓட்டி வருகிறார். ஏற்கனவே வெளியான தகவலின் படி அஜித் 24 மணிநேரம் ஓட்டுவார் என கூறப்பட்டது. இப்போது அவர் ஓட்டும் நேரம் குறைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் தற்போது அஜித் 24 மணிநேர கார் ரேஸில் கலந்து கொண்டு, கார் ஓட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதை தவிர அஜித்தின் அணி ஐரோப்பியன் 24ஹெச், போர்சே 992 ஜிடி3, உள்ளிட்ட 5 கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!