அதிக சம்பளம் கொடுத்து அஜித்தின் அடுத்த பட கால்ஷீட்டை வாங்கிய ரெட் ஜெயண்ட்ஸ்!

First Published | Jan 26, 2025, 3:02 PM IST

நடிகர் அஜித்குமார் நடிக்க உள்ள அடுத்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்க உள்ளதாகவும், இப்படத்திற்காக அவருக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிக சம்பளம் கொடுத்து அஜித்தின் அடுத்த பட கால்ஷீட்டை வாங்கிய ரெட் ஜெயண்ட்ஸ்!

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். அவருக்கு கடந்த ஆண்டு ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாவிட்டாலும், இந்த ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது. இந்த வருடம் அஜித நடித்த இரண்டு படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதில் ஒன்று விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டி இருக்கிறார் அஜித். முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்ட இப்படத்தில் அஜித் உடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற பிப்ரவரி 6-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

Actor Ajith Movie Line Up

விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அப்படம் ரிலீஸ் ஆன இரண்டே மாதங்களில் அஜித்தின் மற்றொரு படமான குட் பேட் அக்லி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா தான் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... அஜித் பக்கம் போகஸை திருப்பிய அரசியல் கட்சிகள்; சைலண்ட் மோடில் விஜய்!


Ajith Next Movie Director Vishnuvaradhan

இந்த இரண்டு படங்களின் ரிலீசுக்கு பின் அக்டோபர் மாதம் வரை எந்தப் படத்திலும் நடிக்கப்போவதில்லை என அறிவித்துள்ள அஜித், கார் ரேஸில் கவனம் செலுத்த உள்ளார். அக்டோபர் மாதத்திற்கு பின் அஜித்தின் 64-வது படத்தின் பணிகள் தொடங்க உள்ளது. அப்படத்தை சிறுத்தை சிவா இயக்குவார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதில் திடீர் ட்விஸ்டாக விஷ்ணுவர்தன் இயக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கியவர் ஆவார்.

Red Giant Produced Ajith AK64 Movie

அஜித் - விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவாக உள்ள இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்க முனைப்பு காட்டி வருகிறதாம். அந்நிறுவனம் இப்படத்திற்காக நடிகர் அஜித்துக்கு ரூ.200 கோடி சம்பளமாக வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்துக்காக ரூ.165 கோடி சம்பளமாக வாங்கி உள்ள நிலையில், அதைவிட 35 கோடி கூடுதலாக கொடுத்து அஜித்தின் கால்ஷீட்டை கொத்தாக தூக்கி இருக்கிறது ரெட் ஜெயண்ட்ஸ்.

இதையும் படியுங்கள்... அஜித்துக்கு முன் பத்ம பூஷன் விருது வென்ற தமிழ் நடிகர்கள் இத்தனை பேரா?

Latest Videos

click me!