Ajith Kumar Receives Gentleman Driver Award in Venice Italy: இத்தாலி வெனிஸ் நகரில் ‘ஜென்டில்மேன் டிரைவர்’ பட்டம் பெற்ற அஜித் குமாருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் எளிமையும், நேர்மையும், கொண்ட உச்ச நடிகராக இருப்பவர் அஜித் குமார். சினிமாவில் மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், அவர் நடிப்பை தாண்டி பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார் . அதில் முக்கியமானது மோட்டார் ரேஸிங். பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்த போதும், ரேஸிங்கிற்கான ஆர்வத்தை அவர் ஒருபோதும் குறைத்துக்கொண்டது இல்லை . வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரேஸிங் பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது அவரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.
26
அஜித்துக்கு கிடைத்த கெளரவம்:
இந்த நிலையில் தான் இத்தாலியின் உள்ள அழகான நகரமான வெனிஸ் இவருக்கு மிகப் பெரிய கௌரவத்தை வழங்கியுள்ளது. உலகின் பல நாடுகளில் இருந்து திறமைமிக்க ரேஸர்கள் கலந்து கொண்ட ஒரு சர்வதேச ஆட்டோமொபைல் நிகழ்ச்சி அங்கே நடந்தது. அதில், ரேஸிங்கில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்களுக்கு வழங்கப்படும் ‘ஜென்டில்மேன் டிரைவர்’ என்ற சிறப்பு விருது, இந்த ஆண்டிற்கான நடிகர் அஜித் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
36
இந்தியாவின் பெருமை:
விழாவில் கலந்து கொண்ட அனைவரும் அவரை மேடையில் வரவேற்ற தருணம் இந்தியாவை பெருமை படுத்தும் நிகழ்வாக இருந்தது. சினிமா துறையை சேர்ந்த ஒரு நடிகர் இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறை. மேடையில் அவரின் ரேஸிங் சாதனைகள் பற்றிய வீடியோ காட்சிகளும் திரையிடப்பட்டன . அதை பார்த்த பலர் அவரை நேரில் சந்தித்து தங்களின் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
46
அஜித்தின் பேச்சு:
விருது பெற்ற பிறகு, அஜித் பேசும் போது, “எனக்கு ரேஸிங் என்பது ஒரு ஆர்வம். அந்த ஆர்வத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொண்டு வந்தேன். என்னை நம்பி துணை நின்றவர்களுக்கும் இந்த அங்கீகாரம் சொந்தம்” என்று கூறியுள்ளார். எப்போதும் போல, இந்த விழா மேடையிலும் அஜித் மிகக்குறைவாகவே பேசினார். அதே நேரம் அந்த கூறிய ஒற்றை வரியிலேயே அவர் காட்டும் உண்மையான மனநிலை வெளிப்பட்டது.
56
உறுதுணையாக நிற்கும் மனைவி:
அஜித்தின் இந்த ரேஸிங் பயணம் எளிதாக அவருக்கு இருக்கவில்லை என்பது அவருடைய ரசிகர்களுக்கும், அவரை பின்தொடர்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். சில போட்டிகளில் காயம் ஏற்பட்டு வலியில் துடித்துள்ளார். பல தடைகள் வந்தாலும், அவர் மன உறுதியை இழக்காமல் இருந்ததே இவரின் வெற்றிக்கு முக்கிய காரணம். அதே போல் அஜித்தின் கனவுக்காக அவரின் மனைவி ஷாலினி தற்போது வரை தோள் கொடுத்து நிற்கிறார். அஜித் தன்னுடைய வெற்றியின் ரகசியமாக குடும்பத்தையே கருதுவதாக பல சமயங்களில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
66
ஜென்டில்மேன் டிரைவர் விருது:
வெனிஸ் நகரில் கிடைத்த 'ஜென்டில்மேன் டிரைவர்' விருதை தொடர்ந்து, அவரின் ரசிகர்கள் இதுவே, அஜித்தின் ரேஸிங் பயணத்தில் மேலும் பல வாய்ப்புகளைத் திறக்கும் என்று நம்புகின்றனர். சர்வதேச போட்டிகளில் அவர் அதிகமாக பங்கேற்க ஆர்வம் காட்டலாம். அடுத்தடுத்த நாட்களில் அவர் எந்நேரமும் புதிய ரேஸிங் திட்டங்களை அறிவிக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மொத்தத்தில், வெனிஸ் நகரில் கிடைத்த 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது, அஜித் குமாரின் முயற்சி, சிரத்தை, ரேஸிங்கிற்கான அன்பு எல்லாம் சேர்ந்து பெற்ற ஒரு பெரும் அங்கீகாரம் என்பது குறிப்பிடத்தக்கது.