வாலி முதல் ராஜா வரை:மீண்டும் இணையுமா இந்த எவர்கிரீன் ஜோடி? ஏக்கத்துடன் ரசிகர்கள்!

Published : Mar 06, 2026, 05:26 PM IST

Ajith Jyothika Hit Movies Collections in Tamil : தமிழ் சினிமாவில் நீங்காத இடத்தை பிடித்த அஜித் மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த படங்கள் என்னென்ன வென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
Ajith Jyothika Combo Movies Tamil

Ajith Jyothika Hit Movies Collections in Tamil : தல அஜித் குமார் மற்றும் ஜோதிகா இருவரும் தமிழ் சினிமாவில் பிரபலமான திரை ஜோடியாக உருவெடுத்தனர், 2000களின் முற்பகுதியில் பல வெற்றிகரமான காதல் மற்றும் உணர்ச்சிபூர்வமான படங்களை நடித்துள்ளனர். குடும்ப திரைப்படம் காதல் கவலைகள் பிரச்சினைகள் என்று அனைத்திலும் மிகத் திறமையாக நடிப்பார்கள். 90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரிட் ஜோடியாக அஜித் குமார் மற்றும் ஜோதிகா இருவரும் வலம் வந்தனர் என்றே சொல்லலாம். அளவிற்கு இவர்களது கெமிஸ்ட்ரி மிகவும் ஒத்துப் போகும். இவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்றும் இருவருமே சொல்லிக் கொள்வார்கள் அந்த அளவிற்கு இவர்களது நட்பு மிகவும் தூய்மையாகவே இருக்கும். 

26
அஜித் ஜோதிகா இணைந்து நடித்த படங்கள்

இவர்களுக்குள் என்ன ஒரு பொருத்தம் என்றால் இவர்களுள் உடன் நடித்த அவர்களையே இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் என்றே சொல்லலாம் அஜித்குமார் உடன் நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் கொண்டார். ஜோதிகா இவருடன் நடித்த சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது வாழ்க்கையும் ஒரே மாதிரியாக இருக்கும்.

36
அஜித் குமார்:

தல அஜித் குமார் என்றாலே தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் ஃபேன் இந்தியா படம் மூலம் இந்தியா முழுவதும்,ஏன் அவருடைய கார் பந்தயம் போட்டியினால் அஜித் குமாரை உலகத்துக்கே தெரியும் என்றும் சொல்லலாம். இவர் நடிப்பில் தனது தனித் தூய்மையான எண்ணத்துடன் சிறந்தவராக விளங்குவார். உடன் நடிப்பவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வார். அதே அளவிற்கு நடிப்பிலும் திறமை வாய்ந்தவர். 90ஸ் கிட்ஸ்களில் இவர் ஒரு பெரிய ஹீரோவாக வளர்ந்து வந்தார் அழகிலும், நிறத்திலும், ஸ்டைலிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை‌. நடிக்கும் படங்கள் எல்லாம் அனைத்தையும் ஹிட் கொடுத்தே வந்தது. அவருக்கு சிறந்த ஜோடியாக ஜோதிகா மிகவும் சூப்பராக இருப்பார்.

46
நடிகை ஜோதிகா:

ஜோதிகா சதானா அக்டோபர் 18, 1978, தமிழ் மற்றும் இந்தித் திரையுலகில் புகழ்பெற்ற இந்திய நடிகை மற்றும் தயாரிப்பாளர். 1997-ல் பாலிவுட்டில் அறிமுகமானாலும், 'வாலி' (1999) மூலம் தமிழில் அறிமுகமாகி, 'குஷி', 'சந்திரமுகி' போன்ற வெற்றிப் படங்களால் முன்னணி நாயகியானார். பிறந்தது மும்பை என்றாலும் இவர் திருமணம் செய்தது தமிழ்நாடு தான். நடிகர் சூர்யாவை 2006 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதற்குப் பிறகு அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு இடைவெளிக்குப் பின் 2015-ல் 36 வயதினிலே மூலம் மீண்டும் சிறப்பான பெண்களை மையப்படுத்திய படங்களில் நடித்து வருகிறார்.

56
அஜித் மற்றும் ஜோதிகா இணைந்த நடித்த படங்கள்:

வாலி (Vaalee - 1999) இது ஜோதிகா அறிமுகமான முதல் தமிழ் திரைப்படம். இதில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தாலும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஜோதிகா அறிமுகம் ஆகிய திரைப்படம் இதுதான். படத்தில் ஜோதிகாவின் பெயர் சோனா. ஒரு பாடலும் இப்படத்தில் உள்ளது மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

முகவரி (Mugavaree - 2000): இசைக்கலைஞனாக துடிக்கின்ற இளைஞனின் போராட்டத்தை சொல்லும் படம். அஜித்தின் யதார்த்தமான நடிப்பும், ஜோதிகாவின் துடிப்பான நடிப்பும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றும் சூப்பர் ஹிட்.

66
பூவெல்லாம் உன் வாசம் (Poovellam Un Vaasam - 2001)

இரு குடும்பங்களுக்கு இடையிலான நட்பு மற்றும் காதலை மையமாகக் கொண்ட படம். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக இது அமைந்தது. அஜித்துக்கு இது ஒரு முக்கியமான கமர்ஷியல் ஹிட். குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற படத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் இந்த படம் திகழ்ந்தது. "ஒவ்வொரு மலர்கள் தருவாய் என என்னும் பாடல்"இன்னும் பாடல் இப்படத்திற்கு மிகப்பெரிய வெற்றி பாடலாக அமைந்தது.

ராஜா (Raja - 2002) இந்தத் திரைப்படத்திலும் அஜித் - ஜோதிகா ஜோடி இணைந்து நடித்தனர். இது ஒரு ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த திரைப்படமாகும். இப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories