தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் அஜித். ஆண்டுதோறும் வெவ்வேறு கதைகள், புதிய அணுகுமுறைகள், மாற்றத்தைக் கொண்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருவதால், அவர் மீது இருக்கும் எதிர்பார்ப்பு எப்போதும் அதிகமாகவே இருக்கும். இந்த ஆண்டு அவரைச் சுற்றி உருவான சினிமா புயல் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ எனும் இரு படங்கள் மூலமாக மேலும் தீவிரமடைந்தது. இதில் குறிப்பாக GBU படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அஜித்தின் அடுத்த படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் கார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
25
மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித்:
அந்த எதிர்பார்ப்புக்கு இடையில் சமீபத்தில் பரவலாக பேசப்பட்ட செய்தி ஒன்றாக, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. கிட்ட தட்ட இது உறுதியான தகவல் என்றாலும் கூட, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
35
அஜித்துடனான அனுபவம்:
அதே போல் அஜித்துடன் பணிபுரிந்த பிரபலங்கள், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் பெட்டிகளில், அஜித்தின் நடிப்புத் திறமை, அவரின் தொழில் ஒழுக்கம், ரசிகர்கள் மீதும், பெரியவர்களிடமும் அவர் காட்டும் அன்பு, எளிமை போன்ற பல விஷயங்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.
45
பாவா லட்சுமணன் சொன்ன தகவல்:
அப்படிப்பட்ட அனுபவங்களில் ஒன்றை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார் நடிகர் பாவா லட்சுமணன். அதாவது ‘ஜனா’ படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், அஜித்தின் எளிமையைப் பற்றி பேசும்போது... படப்பிடிப்பு போது, 100-க்கு மேற்பட்ட ரசிகர்கள் தலையை மொட்டையடித்து அஜித்தை பார்க்க வந்தனர். இதைப் பார்த்த பாவா லட்சுமணன் அஜித்திடம் வந்து இந்த செய்தியை கூறியுள்ளார். உடனே அஜித் அவர்களை, “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டபோது, “நீங்கள் மொட்டையடிச்சிருந்தீர்கள், அதனால் நாங்களும் செய்தோம்,” என ரசிகர்கள் பதிலளித்தனர். எந்த சளைத்தலும் இல்லாமல், அவர்களுடன் அன்போடு கை மேலே வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டாராம் அஜித்.
55
அஜித் செய்த உதவி:
இதற்குப் பிறகு மற்றொரு சம்பவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். படப்பிடிப்புக்கு பிறகு சிலர் தன்னிடம் வந்து சண்டையிட முயன்றதாகவும், அதைத் தடுக்க அஜித்திடம் ஓடி சென்று கூறினேன். உடனே அஜித், “அவங்க என்ன பாக்க வந்தாங்க, பார்த்தாங்க, போட்டோ எடுத்தாங்க. அவர் அவருடைய வேலையை செஞ்சுட்டு இருக்காரு. ஏன் அடிக்க வரீங்க?” என்று கடுமையாக கேட்டதும், அந்தக் குழு ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றுவிட்டதாம். இந்தச் சம்பவங்கள் அஜித்தின் மனிதநேயம், ரசிகர்களுக்கு காட்டும் மரியாதை, உடன் பணிபுரிபவர்களைப் பாதுகாக்கும் மனநிலை ஆகியவற்றை காட்டுவதாக கூறியுள்ளார்.