இது ஒருபுறமிருக்க, ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கும் ஐஸ்வர்யா, காதல் குறித்த தனது பார்வையை பகிர்ந்துள்ளார். அதில், ’காதல் ஒரு பொதுவான உணர்வு, ஒரு ஆளுக்கும் அவரின் தனிப்பட்ட விஷயத்துக்கும் தொடர்பில்லை. நான் என் தந்தையை நேசிக்கிறேன், நான் என் அம்மாவை நேசிக்கிறேன், என் குழந்தைகளை நேசிக்கிறேன். அன்பை கட்டுப்படுத்தக்கூடாது என்று நான் நினைக்கிறேன். ஆம், நான் காதலிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.