'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஐஸ்வர்யா ராய் எடுத்து கொண்ட செல்பி..! வைரலாகும் புகைப்படம்..!

First Published | Jan 28, 2021, 7:19 PM IST

'பொன்னியின் செல்வன்' படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வரும், ஐஸ்வர்யா ராய் சக நடிகை, அருஷிமா வர்ஷினியுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 
 

கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு கொஞ்சம், கொஞ்சமாக உருவம் பெற ஆரம்பித்தது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, லால், ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தாய்லாந்தில் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. அங்குள்ள அடந்த வனப்பகுதியில் பிரம்மாண்ட அரண்மனை போல் செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த கொடூர கொரோனா மணிரத்னத்தின் கனவில் மண்ணை வாரிப்போட்டது.
Tap to resize

உலகம் முழுவதும் தீயாய் பரவிய கொரோனா தொற்றிலிருந்து தப்பிப்பதற்காக ஷூட்டிங்கை ரத்து செய்த படக்குழு அடித்து பிடித்து தாயகம் வந்து சேர்ந்தது.
​தற்போது கொரோனா கால கெடுபிடிகள் எல்லாம் குறைந்துள்ள நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கியுள்ளனர் படக்குழுவினர்.
தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இதனை உறுதி படுத்தும் விதமாக ஐஸ்வர்யா ராணியுடன் நடிகை அருஷிமா வர்ஷினி எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி இருக்கிறது.
இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா மற்றும் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லஷ்மி போன்றோர் நடித்து வருவதாக முன்னரே படக்குழு அறிவித்து இருந்தது. மேலும் இந்தத் திரைப்படத்தில் நடிகை அருஷிமா வர்ஷ்னியும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த செல்பி புகைப்படத்தை அருஷிமா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!