பாலிவுட், கோலிவுட் உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ள நடிகை, ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது நடிப்புத் திறமையாலும், அழகாலும் மில்லியன் கணக்கான ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர்.
L'Oreal பிராண்ட் நிறுவனத்தின் அம்பாசிடராகவும் உள்ளார். தற்போது பாரிசில் நடந்து வரும் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, சில நாட்களுக்கு முன்பு, தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா பச்சனுடன் பாரிஸுக்கு சென்றார்.
இதனை அபிஷேக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஈஃபில் டவர் முன்பு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, Paris when it sparkles என்கிற வாக்கியதோடு வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடந்த ஃபேஷன் வீக்கில் ஐஸ்வர்யா ராய், உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்துள்ளனர்.
இதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய். இந்த ஃபேஷன் வீக்கில், வெள்ளை நிற லாங் கவுனில், 47 வயதிலும் ஜொலிக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில, தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இவரது ரசிகர்கள் பலரும்... ஐஸ்வர்யா ராய்னா சும்மா வா? என்றும் ஃபேஷன் வீக்கையே தன்னுடைய அழகால் தெறிக்க விட்டுள்ளார் என சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.