பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியனுக்கு, அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு இன்னும் பட வாய்ப்புகள் அமையவில்லை என்று தான் கூறவேண்டும்.
பல படங்களின் வாய்ப்புகள் தேடி வர வரும் என இவர் கண்ட கனவு இதுவரை பலிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த ஒரு வாரத்திலேயே... நடிகர் சூர்யா தயாரிக்கும் 'ராமே ஆண்டாளும் ராவண ஆண்டாளும்' படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, ரம்யாவின் நடிப்பு திறமையை வெளிக்காட்டியது.
இந்த படத்தை தொடர்ந்து, இவரது கைவசம் எந்த ஒரு படமும் இல்லை என்றாலும், சில படங்களில் நடிக்க இவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
அதே நேரத்தில் முன்னணி நடிகருக்கு ஜோடி சேர... தீயாக இறங்கி விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் ரம்யா பாண்டியன், தற்போது வெள்ளை நிற டைட் பேன்ட் மற்றும் ஸ்லீவ் லெஸ் உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
செம்ம ஸ்டைலிஷாகவும், ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் இவர் கொடுத்துள்ள போஸ் , ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
கவர்ச்சி - ஹோமிலி என இரண்டிலும் கலக்கி வரும் ரம்யா... இந்த போட்டோ ஷூட்டில் ஓவர் மேக்அப் இல்லாமல், அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார்.
Ramya Pandian