நடிகை சமந்தாவின் இரண்டாவது திருமணம் பற்றிய செய்திகள் இணையத்தை ஆக்கிரமித்து இருந்த நிலையில், தற்போது சோபிதா துலிபாலா சொன்ன குட் நியூஸ் அதை ஓவர்டேக் செய்திருக்கிறது.
தென்னிந்தியாவின் பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் 'தி ஃபேமிலி மேன்' புகழ் இயக்குனர் ராஜ் நிடிமோரு ஆகியோரின் திருமணம் சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. டிசம்பர் 1 ஆம் தேதி மிகவும் எளிமையாகவும், யோக பாரம்பரியத்தின்படியும் நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதும், ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் புதிய தம்பதியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
24
சமந்தா திருமணம்
சமந்தா மற்றும் ராஜ் நிடிமோருவின் திருமணத்தைப் பொறுத்தவரை, இந்த ஜோடி 'பூத சுத்தி விவாஹம்' என்ற தனித்துவமான யோக பாரம்பரியத்தின்படி மாலை மாற்றிக்கொண்டுள்ளனர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மட்டுமே நடந்த இந்த விழாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த இரு தினங்களாக சமந்தா - ராஜ் நிடிமோரு திருமணத்தை பற்றிய பேச்சுக்கள் தான் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளன. இந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாக சைதன்யாவின் இரண்டாவது மனைவி ஷோபிதா ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
34
சோபிதா சொன்ன குட் நியூஸ்
அதன்படி சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நடிகர் நாக சைதன்யா, அவரை கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் வீட்டில் வைத்தே எளிமையாக நடைபெற்றது. அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், தங்களுக்கு திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதற்காக சிறப்பு பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சோபிதா. அந்த பதிவு தான் தற்போது இன்ஸ்டாவில் செம வைரல் ஆகி வருகின்றது.
இருவரின் திருமணத்தின் போது எடுத்த வீடியோவை பதிவிட்டு, திருமண சடங்குகளின் போது நடந்த இனிய தருணங்கள் அடங்கிய அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. மேலும் காற்று எப்போதும் வீடு நோக்கி வீசும். நான் கணவர் என்று அழைக்கும் மனிதருடன் சூரியனைச் சுற்றி ஒரு பயணத்தில், நெருப்பால் சுத்திகரிக்கப்பட்டது போல நான் புதிதாக உணர்கிறேன் என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார் சோபிதா. அவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருவதோடு, வாழ்த்துமழையும் பொழிந்து வருகிறார்கள் ரசிகர்கள்.