ரசிகர்களுடன் 'பொன்னியின் செல்வன் 1' படம் பார்த்த ஆதித்த கரிகாலன்..! வைரலாகும் விக்ரம் போட்டோஸ்..!

First Published | Sep 30, 2022, 5:14 PM IST

இன்று வெளியான பொன்னியின் செல்வன்' படத்தை, ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் பிரபல திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார்.
 

பாகுபலி படத்திற்கு இணையான பிரமாண்ட படைப்பான வரலாற்று காவியம், 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த படத்தில் ராஜ ராஜ சோழனின் சகோதரர், வீர  நிறைந்த மன்னர் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தனர் நடிகர் விக்ரம். பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலன் எப்படி இருப்பான் என வர்ணனை செய்யப்பட்டுள்ளது அதே போன்று தோன்றி ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

மேலும் செய்திகள்: 'நானே வருவேன்' சக்ஸஸ்... செல்வராகவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தாணு..!
 

Tap to resize

மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் இந்த படத்தை எடுத்து முடித்துள்ள இயக்குனர் மணிரத்தினம் கதை, மற்றும் கதாபாத்திரங்கள் தேர்விலும்... அவர்களை வேலை வாங்கிய விதத்திலும் இயக்குனராக தன்னுடைய பணியை நேர்த்தியாக செய்திருந்தாலும், விஷுவலில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

விமர்சனங்களை கடந்து வெற்றிவாகை சூட்டியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை நடிகர் விக்ரம் இன்று சென்னையில் உள்ள பலசோ திரையரங்கில், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' படத்தில் மொத்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்து மாஸ் காட்டிய வந்திய தேவன் கார்த்தி..!
 

Latest Videos

click me!