yashika:உங்களை முதன்முதலில் நிர்வாணமாக பார்த்தது யார்? நெட்டிசனின் ஏடாகூடமான கேள்விக்கு கூலாக பதிலளித்த யாஷிகா

First Published | Mar 9, 2022, 5:40 AM IST

yashika : விபத்துக்கு பின் தற்போது பழையபடி படங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாகி உள்ள யாஷிகா, நேற்று ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடினார். 

யாஷிகாவின் அறிமுகம்

ஜீவா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா. இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

பிரபலமாக்கிய பிக்பாஸ்

இதையடுத்து நோட்டா, ஜாம்பி போன்ற படங்களில் நடித்த யாஷிகா, கடந்த 2018-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். இந்நிகழ்ச்சி மூலம் இவருக்கும் ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர்.

Tap to resize

பட வாய்ப்புகள்

இதையடுத்து சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இயங்கி வந்த யாஷிகா, ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அதன் பலனாக அவருக்கு பட வாய்ப்பும் குவிந்தன. தற்போது இவர் கைவசம் கடமையை செய், பாம்பாட்டம், சல்பர், பெஸ்டி, சிறுத்தை சிவா, ராஜ பீமா போன்ற படங்கள் உள்ளன.

எதிர்பாரா விபத்து

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வந்த யாஷிகாவுக்கு கடந்தாண்டு ஒரு சோகமான ஆண்டாக மாறியது. இவர் கடந்தாண்டு ஜூலை மாதம் தனது தோழியுடன் பாண்டிச்சேரியில் நடந்த பார்ட்டியில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கினார். இதில்  அவரது தோழி வள்ளிசெட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா, 4 மாதங்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று பின்னர் குணமானார்.

நெட்டிசனுக்கு நெத்தியடி பதில்

தற்போது பழையபடி படங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாகி உள்ள யாஷிகா, நேற்று ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு ஓப்பனாக பதிலளித்தார். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர், உங்களை முதன்முதலில் நிர்வாணமாக பார்த்தது யார்? என ஏடாகூடமான கேள்வி கேட்க, இதனை புறக்கணிக்காமல், ‘டாக்டர்னு நினைக்கிறேன்’ என கூலாக பதிலளித்தார்.

இதையும் படியுங்கள்... Malavika mohanan :அட்ராசக்க.. மாஸ்டர் நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு! பாகுபலி நாயகனுடன் டூயட்பாட போறாராம்

Latest Videos

click me!