Radhika Sarathkumar : ரூ.18 லட்சத்தை ஏமாற்றிய நடிகை ராதிகா சரத்குமார்.. புலம்பிய நடிகை விஜி

Published : Jun 25, 2025, 09:05 AM IST

ராதிகா சரத்குமாரின் ராடான் மீடியா இயக்கிய சீரியல் ஒன்றில் நடித்தற்காக இன்னமும் தனக்கு சம்பளம் வரவில்லை என்று நடிகை விஜி சந்திரசேகர் வேதனை தெரிவித்துள்ளார்.

PREV
16
Actress Viji Chandrasekhar Interview

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கிய ‘தில்லு முல்லு’ படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் விஜி சந்திரசேகர். நடிகை சரிதாவின் தங்கையான இவர், முதல் படத்திற்குப் பின்னர் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். பின்னர் 12 ஆண்டுகள் கழித்து இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ‘கிழக்கு சீமையிலே’ படத்தின் மூலமாக மீண்டும் திரைத்துறைக்குள் வந்தார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் சுமார் 30-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். தற்போதும் பல படங்களில் நடித்து முடித்துள்ளார். இவரது நடிப்பு பலராலும் வெகுவாக பாராட்டப்படுகிறது. தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

26
திரைத்துறையில் விஜி சந்திரசேகர் சந்தித்த பிரச்சனைகள்

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மாமன்’ மற்றும் ‘டிஎன்ஏ’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ‘மாமன்’ திரைப்படத்தில் ராஜ்கிரணுக்கு மனைவியாக இவர் நடித்த காட்சிகள் பலரின் மனதை உருக்குகின்றன. ஒரு கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருவரும் நடித்துக் காட்டி இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ள விஜி சந்திரசேகர், திரைத்துறையில் தான் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில் தான் நன்றாக நடித்த போதிலும் தனக்கு சரியான சம்பளம் கிடைப்பதில்லை. பல சமயம் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுகிறது. இதனால் திரைத்துறையை விட்டு சென்று விடலாமா என்றெல்லாம் யோசித்து இருப்பதாக வேதனையுடன் கூறியிருக்கிறார்.

36
சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை

நிறைய நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அதற்கான சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்பட்டது கிடையாது. பலரும் என்னை பிரபல நடிகைகளுடன் ஒப்பிட்டு, “நீங்கள் அவர்களை விட நன்றாக நடிக்கிறீர்கள்” என்று கூறுவார்கள். “அவர்கள் நடிக்க மட்டும் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் அந்த கதாபாத்திரமாகவே வாழ்கிறீர்கள்” என்று கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கு தரும் சம்பளம் கூட எனக்கு கிடைக்காது. சில நேரங்களில் திரைத் துறையை விட்டு விலகலாம் என்று எல்லாம் நினைப்பேன். வெயில், மழை என அனைத்து காலத்திலும் நடிப்பேன். ஆனால் சம்பளம் வாங்குவதற்கு போராட வேண்டும். சில நடிகர்ள் முதலில் சம்பளத்தை எடுத்து வையுங்கள். அதன் பிறகு நடிக்கிறேன் என்று கறாராக இருப்பார்கள். ஆனால் நான் சம்பள விஷயத்தில் அவ்வளவு கறார் காட்ட மாட்டேன்.

46
சந்திரகுமாரி சீரியலில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்

நல்லபடியாக படம் வரவேண்டும். அதன் பின்னர் சம்பளம் வாங்கிக் கொள்ளலாம் என்று விட்டு விடுவேன். ஆனால் படம் முடிந்த பின்னர் அவர்கள் குட் பை சொல்லிவிட்டு கிளம்பி விடுவார்கள். நடத்து முடித்த பிறகு சம்பளம் தருகிறேன், நாளை தருகிறேன் என்று கூறுவார்கள். ஆனால் எத்தனையோ நாள் போய்விட்டது. எனக்கு இன்னமும் சம்பளம் வரவில்லை. சம்பளம் கொடுத்தால் தான் நடித்துக் கொடுப்பேன் என்று கூறுவதற்கு எனக்கு மனம் வரவில்லை. நான் ஒரு சீரியலின் நடித்து முடித்து எட்டு ஆண்டுகள் ஆகிறது. இன்னமும் சம்பளம் வரவில்லை. பிரபல தொலைக்காட்சி தொடர் ஒன்றில் ராதிகா நடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சீரியலின் நேரம் மாற்றப்பட்டதால் ராதிகாவால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. எனவே அதிலிருந்து விலகினார். அவருடைய கதாபாத்திரத்தில் என்னை நடிக்கச் சொன்னார். நான் முதலில் மறுத்தேன். ஆனால் எனக்காக இதில் நடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

56
ரூ.18 லட்சத்தை ஏமாற்றிவிட்டார்கள்

அவர் எனக்கு அக்கா மாதிரி, அவர் சொன்னதால் இரவு பகலாக அந்த சீரியலில் நடித்தேன். ஆனால் அந்தத் தொடரை பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள். அந்த சீரியலை முடிக்கப் போவது கூட எனக்கு தெரியாது. கடைசி நாள் ஷூட்டிங்க்கு யாரும் வரப்போவதில்லை, எங்களுக்கு சம்பள பாக்கி இருப்பதாக சக நடிகர்கள் கூறினார்கள். ஆனால் நான் லீட் ரோலில் நடிக்கிறேன். எனக்குத் தெரியாமல் அப்படியெல்லாம் நிறுத்த மாட்டார்கள் என்று கெஞ்சி அவர்களை வற்புறுத்தி ஷூட்டிங் அழைத்துச் சென்றேன். ஆனால் எனக்கே தெரியாமல் அந்த சீரியலை நிறுத்தி விட்டார்கள். ஷூட்டிங் முடிவதற்கு முன்பு மாலை 5.45 மணி போல வந்து இன்றைக்கு தான் கடைசி நாள் என்று கூறினார்கள். அதனால் மிகவும் மன வேதனை ஏற்பட்டது. நான் அழைத்து வந்த சக நடிகர்கள் 40 பேரின் முகத்தை நாம் எப்படி பார்ப்பேன்? அவர்கள் நான் மட்டும் சம்பளம் வாங்கி விட்டதாக நினைத்திருப்பார்கள்.

66
ஏமாற்றுபவர்களை கர்மா சும்மா விடாது

எனக்கு ரூ.18 லட்சம் பாக்கி தர வேண்டும். சின்ன தொகை கிடையாது. நான் பலமுறை அந்த நிறுவனத்தை அழைத்து கேட்டுவிட்டேன். ஆனால் இதுவரை பணம் வரவில்லை. இந்தத் துறை உண்மையானது கிடையாது. ஆனால் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள். ஒரு சிலரால் இது போன்ற சம்பவங்கள் நடக்கும். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். கர்மா என்று ஒன்று இருப்பதை நான் நம்புகிறேன். எனவே அவர்களை கர்மா பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டேன். என் நெற்றியில் ஏமாளி என்று எழுதி இருக்கிறது. போல அதனால் தான் பலரும் என்னை ஏமாற்றுகிறார்கள். ஆனால் இதன் பிறகு நான் கறாராக இருப்பேன் என்று சிரித்தபடியே கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories