3 மாதம் வாடகை பாக்கி... வீதிக்கு வந்த நடிகை விஜயலட்சுமி..! ஹரி நாடாருக்கு என்ன சம்பந்தம்?

First Published | Apr 25, 2021, 3:44 PM IST

இந்நிலையில், தற்போது இவர் வாடகை கொடுக்காததால், வீட்டில் இருந்த பொருட்களை மற்றொரு அறைக்கு மாற்றி வைத்துவிட்டு, அவர் தங்கி இருந்த அறையை வேறொரு நபருக்கு வாடகை விட்டுள்ளதாக விஜயலட்சுமி அளித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ப்ரண்ட்ஸ்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'நந்தினி' சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இவரது சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பல பிரபலங்கள் இவருக்கு உதவி செய்தனர். இந்நிலையில், தற்போது இவர் வாடகை கொடுக்காததால், வீட்டில் இருந்த பொருட்களை மற்றொரு அறைக்கு மாற்றி வைத்துவிட்டு, அவர் தங்கி இருந்த அறையை வேறொரு நபருக்கு வாடகை விட்டுள்ளதாக விஜயலட்சுமி அளித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tap to resize

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள அபார்ட்மெண்ட் தரைதளத்தில் நடிகை விஜயலட்சுமி, மற்றும் அவரது சகோதரி ஆகியோர் வாடகைக்கு தங்கி இருந்துள்ளனர். விஜயலக்ஷ்மியின் சகோதரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்துவிட்டு சகோதரியுடன் மீண்டும் தான் தங்கி இருந்த அபார்ட்மெண்டுக்கு திரும்பியபோது விஜயலட்சுமிக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.
விஜய லட்சுமி தங்கியிருந்த அறையில் ஆண் ஒருவர் குளித்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர் அப்பார்ட்மெண்ட் நிர்வாகிகளிடம் கூறி நியாயம் கேட்டுள்ளதாக தெரிகிறது. இதற்க்கு மூன்று மாதமாக வாடகை தராததால், அவருடைய பொருட்களை மற்றொரு அறையில் பத்திரமாக வைத்து விட்டு, விஜய லட்சுமி தங்கி இருந்த அறையை மற்றொருவருக்கு வாடகை விட்டுவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் ஆவேசமான விஜயலட்சுமி தனது பொருட்களை எல்லாம் அறையிலிருந்து வெளியில் தூக்கி வைத்துவிட்டு செய்தியாளர்களை அழைத்து அப்பார்ட்மெண்ட் நிர்வாகிகள் மீது குற்றஞ்சாட்டினார். மேலும் இதற்க்கு காரணமும், சீமான் தான் என்பது போல் அடுக்கடுக்காக தன்னுடைய குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இது குறித்து, அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது... ஹரிநாடார் அண்ணன் தான் எனக்கு நன்கு தெரிந்த இடம், எந்த பிரச்னையும் வராது என இந்த அப்பார்ட்மெண்டில் தன்னை தங்க வைத்ததாகவும் தற்போது அவருக்கு தெரிந்தோ... தெரியாமலோ... என்னுடைய பொருட்களை வெளியே வைத்துள்ளனர் என ஆவேசமாக பேசினார். உண்மையிலேயே வாடகை பணம் பிரச்சனை என்றால் தன்னை அழைத்தோ அல்லது தன்னை தங்க வைத்த ஹரி நாடார் அவர்களிடம் பேசியிருக்கலாம் ஆனால் அப்படி யாருமே செய்யவில்லை.
இதுகுறித்து அபார்மெண்ட் தரப்பினர் கூறுகையில் , ‘கடந்த பிப்ரவரி மாதம் முதல் விஜயலட்சுமி வாடகை பணம் கொடுக்கவில்லை என்றும் விஜய லக்ஷ்மியை ஜாவித் என்பவர் தான் அழைத்து வந்து தங்க வைத்தார் என்றும் ஹரி நாடாருக்கு சம்மந்தம் இல்லை என தெரிவித்தார்.
மேலும் இந்த பிரச்சனையில் விஜயலட்சுமி நாடகம் ஆடுவதாகவும் அப்பார்ட்மெண்ட் உதவியாளர் ஒருவரை விஜயலட்சுமி செருப்பால் அடித்து அவமானப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். அப்பார்ட்மெண்ட் தரப்பினர் செய்தியாளர்களிடம் பேசி கொண்டிருக்கும் போது, அதனை தடுத்த விஜய லட்சுமி, நான் பேசுவதை மட்டும் போடுங்கள் என கூறியதால் பரபரபாபு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த, தேனாம்பேட்டை காவல்துறையினர் விஜயலட்சுமியை சமாதானப்படுத்தி தற்காலிகமாக வேறு ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

Latest Videos

click me!