நடிகை வரலட்சுமி சரத்குமாரின் கலவையான கேரக்டர் தேர்வுகள் இவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து அசத்தி வருகிறார். கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நேற்று தன்னுடைய பிறந்தநாளை மிகவும் விமர்சையாக, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகளுக்கு, பொம்மை, சாக்லேட், கேக், போன்றவற்றை வழங்கி கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சின்னஞ்சிறு குழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என தெரிவித்தார். மேலும் செய்தியாளர்கள் எழுப்பியபல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் எப்போது உங்களது திருமணம் என்ற கேள்வியைஎழுப்பினார். இந்த கேள்விக்கு சட்டென்று கோபமான வரலட்சுமி, திருமணம் எப்போது என்ற கேவலமான கேள்வியை யாரிடமும் கேட்க வேண்டாம் என காட்டமாக தெரிவித்தார்.
பின்னர் திருமணம் என்பது பெண்களுக்கு அவசியமான ஒன்றா? அது ஒரு கொள்கையா என்றும், பெண்கள் என்றால் திருமணம் செய்ய வேண்டும் என்று ஏதாவது உள்ளதா? பின்னர் ஏன் இப்படி ஒரு கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருகின்றீர்கள். ஆண்களுக்கு சில கொள்கைகள் இருக்கும் போது பெண்களுக்கு மட்டும் கொண்டு இருக்கக் கூடாதா? என்றும் கல்யாணம் எப்போது என்கிற கேவலமான கேள்வியை மட்டும் யாரிடமும் கேட்காதீர்கள் என வரலட்சுமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகை வரலட்சுமி அவரது நீண்டநாள் நண்பரும், நடிகருமான விஷாலை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன் பின்னர் விஷாலுக்கும் அனிஷா என்கிற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது... பின்னர் அந்த திருமணமும் நடைபெறவில்லை.