வாணி போஜன், நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடித்த, 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், ஹீரோயின் ரித்திகா சிங்கை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ரசிகர்களை ஈர்த்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்ற துவங்கிவிட்டார்.
vani bojan
'ஓ மை கடவுளே' படத்தை தொடர்ந்து, வைபவுக்கு ஜோடியாக வாணி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான, லாக்அப் படத்திற்கு, கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
எனினும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் வாணி போஜன், அந்த வகையில் தற்போது இவரது கைவசம்... 'பாயும் ஒளி நீ எனக்கு', பகைவனுக்கு அருள்வாய், சியான் 60 உள்பட சுமார் 6 படங்கள் இவரது கைவசம் உள்ளது.
மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்ற, விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது... அழகு பதுமையாக பிங்க் நிற சேலையில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படத்துக்கு லைக்குகள் அள்ளுகிறது.