sneha stuning photos : அட சினேகாவா இது.. சூப்பர் மாடலாக மாறிய புன்னகை அரசி...

First Published Jan 25, 2022, 10:24 PM IST

sneha stuning photos : ஓவர் மேக்கப்பில் ஆளே அடையாளம் தெரியாத வண்ணம் சினேகா நடத்தியுள்ள போட்டோ சூட்டுக்கு.. மேக்கப் இல்லாமலே நீங்க சூப்பராத்தான் இருப்பிங்க என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.. 

sneha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த, சினேகா திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின்பும் கூட ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார். சூர்யா - ஜோதிகாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் காதல் தம்பதி சினேகா - பிரசன்னா.

sneha

2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டது. பின்பு இரு வீட்டார் சம்மத்துடன் பிரம்மாண்டமாக சென்னையில் திருமணம் நடைப்பெற்றது.

sneha

2015ம் ஆண்டு இந்த காதல் தம்பதிக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். இதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த சினேகாவிற்கு வேலைக்காரன் படம் மூலம் ரசிகர்கள் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தனர்.

sneha

இந்த படத்தில் நடித்து முடித்ததும், சில பட வாய்ப்புகள் இவரை தேடி வர துவங்கியது. ஆனால் திடீர் என சினேகா மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். 

sneha

தனுஷுடன் 'பட்டாஸ்' படத்தில் வயிற்றில் குழந்தையை வைத்து கொண்டே, களரி பயிற்சி எடுத்து ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்து அசத்தி இருந்தார்.

sneha

குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை கூடி காணப்பட்ட இவர், தற்போது வெகுவாக தன்னுடைய உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார்.

sneha

திரையுலகில் கவனம் செலுத்த தயாராகியுள்ள சினேகா...சோசியல் மீடியாவில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

sneha

அந்த வகையில் தற்போது ஓவர் மேக்கப்பில் ஆளே அடையாளம் தெரியாத வண்ணம் சினேகா நடத்தியுள்ள போட்டோ சூட்டுக்கு.. மேக்கப் இல்லாமலே நீங்க சூப்பராத்தான் இருப்பிங்க என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.. 

click me!