விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பகல் நிலவி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான ஷிவானி, இதையடுத்து இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார்.
பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சம் காரணமாக, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அதன்படி மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் விக்ரம் படத்தில் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படம் மூலம் அவர் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.
இதையடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் போலீஸாக நடித்துள்ளார்.
இதுதவிர ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்திலும், வெற்றிக்கு ஜோடியாக பம்பர், வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார் ஷிவானி.
இவ்வாறு நடிப்பில் பிசியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் ஷிவானி. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஷிவானி. மாடர்ன், டிரெடிஷனல் என எந்தவித உடையிலும் கவர்ச்சியை தூக்கலாக காட்டி இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம்.
அந்த வகையில், தற்போது சேலையில் மொத்த அழகையும் காட்டியபடி செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.