Samantha Blessed With a Baby : அம்மா ஆனார் சமந்தா... குழந்தைக்கு அவர் சூட்டிய ஷார்ட் அண்ட் ஸ்வீட் பெயர் என்ன தெரியுமா?

Published : Nov 20, 2026, 02:29 PM IST

Samantha Baby Name : நடிகை சமந்தா தனக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளதோடு, தன்னுடைய குழந்தையின் பெயரையும் ரிவீல் செய்துள்ளார்.

PREV
16
Samantha Blessed With a Baby Boy

தமிழ் திரையுலகில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. இதையடுத்து அதர்வாவுக்கு ஜோடியாக பானா காத்தாடி படத்தில் நடித்து இளசுகளின் மனதை கொள்ளையடித்தார் சமந்தா. அவருக்கு இருக்கும் கிரேஸை பார்த்து, அவரை விஜய்க்கு ஜோடியாக தெறி படத்தில் நடிக்க வைத்தார் அட்லீ. அப்படத்தில் காமெடி காட்சிகள் மட்டுமின்றி எமோஷனல் காட்சியிலும் பின்னி பெடலெடுத்து இருந்தார் சமந்தா. பின்னர் அவருக்கு அடுத்தடுத்து விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது.

26
விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்

கடந்த 2017ம் ஆண்டு நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடியின் திருமண வாழ்க்கை 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கடந்த 2021-ம் ஆண்டு இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பின்னர் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார் சமந்தா. அவர் தமிழ், தெலுங்கு தாண்டி இந்தி படங்களில் நடிக்க கமிட்டானார். அவருக்கு பான் இந்தியா பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.

36
மயோசிடிஸ் நோய் பாதிப்பு

பிசியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த சமந்தாவுக்கு பேரிடியாக வந்தது தான் மயோசிடிஸ் நோய் பாதிப்பு. இந்த அரிய வகை தோல் அளர்ச்சி நோயால், நடிகை சமந்தா, 2 ஆண்டுகள் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். இதற்காக வெளிநாடுகளில் பல்வேறு சிகிச்சை எடுத்த பின்னரே அதிலிருந்து மீண்டார் சமந்தா. அதன்பின்னர் படிப்படியாக படங்களிலும் நடிக்க தொடங்கினார். அந்த சமயத்தில் தான் அவருக்கு இரண்டாவது காதல் மலர்ந்தது. சில மாதங்கள் ரகசியமாகவே காதலித்து வந்தார்.

46
ராஜ் நிடிமோருவை கரம்பிடித்த சமந்தா

சமந்தா நடித்த தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரை இயக்கிய ராஜ் நிடிமோரு தான் சமந்தாவின் புதுக் காதலன் என்பது அவர் அறிவிக்கும் முன்னரே ரசிகர்கள் கண்டுபிடித்துவிட்டனர். இதையடுத்து கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வைத்து ராஜ் நிடிமோருவை ரகசிய திருமணம் செய்துகொண்டார் சமந்தா. கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனது. இதையடுத்து மா இண்டி பங்காரம் என்கிற் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக மிரட்டினார் சமந்தா. அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

56
சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த சமந்தா

மா இண்டி பங்காரம் படத்தின் பிரஸ்மீட்டில் பேசியபோது தான் சினிமாவில் இருந்து மீண்டும் பிரேக் எடுக்க இருப்பதாக அறிவித்த சமந்தா, தான் கர்ப்பமாக இருக்கும் தகவலையும் போட்டுடைத்தார். கர்ப்பிணியாக இருந்தபோதே தமிழில் புதிதாக தொடங்கப்பட்ட சோனி விழா என்கிற சேனலில் ஒளிபரப்பாகி வரும் செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் சமந்தா. அந்த ஷோவில் சில வாரங்கள் மட்டுமே கலந்துகொண்ட சமந்தா, தன்னுடைய 9வது மாதத்தில் இருந்து பிரேக் எடுத்தார்.

66
சமந்தாவுக்கு குழந்தை பிறந்தாச்சு

இந்நிலையில், நடிகை சமந்தாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தனக்கு பிறந்த முதல் குழந்தை என்பதால் அதன் கையை பிடித்தவாரு இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்த சமந்தா, நவம்பர் 19ந் தேதி தனக்கு குழந்தை பிறந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அதோடு தன்னுடைய மகனின் பெயரையும் அந்த பதிவிலேயே குறிப்பிட்டிருக்கிறார். தன் மகனுக்கு தேவ் நிடிமோரு என பெயரிட்டுள்ளதாக சமந்தா அறிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், பெயர் ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக இருப்பதாக கமெண்ட் செய்து வருவதோடு சமந்தாவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories