அடையாளமே தெரியல... பள்ளி சீருடையில் தோழிகளுடன் சாய் பல்லவி எடுத்து கொண்ட புகைப்படம்!

First Published Jul 27, 2020, 3:09 PM IST

 அடையாளமே தெரியல... பள்ளி சீருடையில் தோழிகளுடன் சாய் பல்லவி எடுத்து கொண்ட புகைப்படம்!
 

நடிகைகள் சிலர் பத்து படங்களில் நடித்தாலும் கூட சொல்லிக் கொள்வது போல் ஒரு கேரக்டரோ, பாடலோ கிடைக்காது. ஆனால் சில நடிகைகள் ஒரே படத்தில் தேசிய புகழ் அடைவார்கள்.
undefined
ஆனால் நடிகை சாய் பல்லவியோ இவை அத்தனையையும் தூக்கி சாப்பிட்டவர். தாறுமாறான நடன திறமை, பாந்தமான அழகு, நீட் நடிப்புத்திறமை இவை அனைத்தும் கலந்த ஒரு கலவைதான் சாய் பல்லவி.
undefined
ஆரம்பத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தன் மூலம் தான் சாய் பல்லவியின் அறிமுகம் அமைந்தது.
undefined
சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் கன்னாபின்னா ஹிட்டடித்த ‘பிரேமம்’ படத்தின் ‘மலர் டீச்சர்’ பாத்திரத்தால் மலையளவு ஹிட்டடித்தார். அந்தப் படம் அவரை தென்னிந்தியா முழுக்க அடையாளப்படுத்தியது.
undefined
அதன் பின் தனுஷுடன் அவர் நடித்த ‘மாரி 2’ படத்தில், ‘ரெளடி பேபி’ பாடலில் அவர் ஆடிய நடனமோ இன்று உலக அளவில் டிரெண்டிங் பாடல்களில் ஒன்றாக உள்ளது. இப்படி ஒரு படம், ஒரு பாடல் என சிம்பிள் ரூட்டில் செம்ம உச்சம் தொட்டவர் சாய்பல்லவி.
undefined
தற்போது தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அங்கும் சாய் பல்லவி நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ஹிட்டடிக்க தெலுங்கு ரசிகர்களின் மனதையும் கவர்ந்துவிட்டார்.
undefined
இந்நிலையில் ஃபிடா படத்தை இயக்கிய, சேகர் காமுலா லவ் ஸ்டோரி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்து வருகின்றனர். இந்த படத்தில் இடம் பெறவிருக்கும் சூப்பர் பாடல் ஒன்றிற்கு நடனம் அமைக்கும் படி இயக்குநர் சாய்பல்லவியிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது.
undefined
பட பிடிப்புகள் இல்லை என்றாலும், தொடர்ந்து.... சாய் பல்லவி பற்றி சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது சாய் பல்லவி அவர் பள்ளி பருவத்தில் தோழிகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
undefined
click me!