கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளர்... தெருக்கோடி வரை விரட்டி விட்ட சாய் பல்லவி...!

தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி, தனது வீடு தேடி வந்த நல்ல வாய்ப்பை வேண்டாம் என உதறித்தள்ளியுள்ளார். இதனால் முதலில் ரசிகர்கள் வேதனை அடைந்தாலும் அதற்கான காரணம் வெளியான பின்பு, எங்க தலைவி தான் கெத்து என பெருமையாக நினைக்கின்றனர். அப்படி என்ன நடந்தது என பார்க்கலாம் வாங்க...

2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் "பிரேமம்". இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. "பிரேமம்" படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது.
பக்கா தமிழ் பெண்ணான சாய் பல்லவி டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழில் கரு படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, அடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்திலும் சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும் நடித்தார்

மாரி 2 படத்தில் தனுஷுடன் சேர்ந்து சாய் பல்லவி ரவுடி பேபி பாடலுக்கு போட்ட ஆட்டம் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அதிர வைத்தது.
தற்போது அந்த பாடல் 90 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து தென்னிந்தியாவிலேயே டாப் சாங் என்ற பெருமையை பெற்றுள்ளது..
மேலும் மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் சாய் பல்லவி கைவசம் பல படங்கள் உள்ளன.
தனக்கேன சில கொள்கைகளை வகுத்து திரைப்படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, கதை நன்றாக இருந்தால் மட்டுமே படங்களில் நடிக்க சம்மதிக்கிறார்.
கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறேன் என தயாரிப்பாளர்கள் ஆசை வார்த்தை கூறினாலும், ஸ்கிரிப்ட் கொடுங்க படிச்சிட்டு சொல்றேன் என கறாராக துரத்தி விடுவது தான் சாய் பல்லவியின் வழக்கம்.
தெலுங்கில் சாய் பல்லவிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதனால் சமீபத்தில் டோலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் தனது படத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவியை அணுகியுள்ளார்.
கோடி, கோடியாய் சம்பளம் கொடுக்க தயாராக இருந்த தயாரிப்பாளர் சாய் பல்லவிக்கு போட்டது ஒரே ஒரு கன்டிஷன் தான். அதாவது அநியாயத்திற்கு ஓவர் கிளாமராக நடிக்க வேண்டும் என்பது தான்.
இதைக் கேட்டதும் செம்ம கடுப்பான சாய் பல்லவி அந்த தயாரிப்பாளரிடம் அவருடைய படமும், வேண்டாம் கோடிகளில் கொடுக்கும் சம்பளமும் வேண்டாம் என உதறி தள்ளிவிட்டாராம் .

Latest Videos

click me!