Sai Dhanshika: மிதமான மேக்கப்பில் மிதமிஞ்சிய அழகில்... தேவலோகத்து தேவதையாய் மின்னும் சாய் தன்ஷிகா!

Published : Dec 17, 2021, 07:43 PM IST

ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி வரும் சாய் தன்ஷிகா, தற்போது வெளியிட்டுள்ள கியூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

PREV
110
Sai Dhanshika: மிதமான மேக்கப்பில் மிதமிஞ்சிய அழகில்... தேவலோகத்து தேவதையாய் மின்னும் சாய் தன்ஷிகா!

பக்கா தமிழ் பொண்ணான சாய் தன்ஷிகா, ஜெயம் ரவி நடித்த "பேராண்மை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 
210

அதன் பின்னர் "அரவான்", "பரதேசி" போன்ற படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

 
310

 சூப்பர் ஸ்டார் மகளாக "கபாலி" படத்தில் நடித்த தன் மூலம், பிரபலமான நடிகையாக  மாறினார். மேலும் மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, விழித்திரு போன்ற படங்களிலும் சாய் தன்ஷிகா நடித்துள்ளார். 

 
410

தமிழ் சினிமாவில் அழகாக தமிழ் பேசக்கூடிய நடிகையான சாய் தன்ஷிகா, காவிரி பாயும் தஞ்சை மண்ணில் பிறந்தவர். சிலம்பம் சுற்றுவதில் வல்லவர்.

 
510

திரைப்படங்களில் கவர்ச்சிக்காக மட்டும் நடிகைகளை பயன்படுத்துவதை ஏற்காத சாய் தன்ஷிகா, தனக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் மட்டுமே தேர்தெடுத்து நடித்து வருகிறார்.

 
610

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என திரைத்துறையைச் சேர்ந்த நடிகைகள் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி பட வாய்ப்பை பெற்று வரும் நிலையில், தற்போது சாய் தன்ஷிகாவும் போட்டோ ஷூட் நடத்தி பட வாய்ப்புகளை கை பற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

 

710

அந்த வகையில் தற்போது தன்னுடைய கியூட் புன்னகையோடு வெளியிட்டுள்ள அழகி புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து வருகிறது.

 

810

வாவ்... சிக்கென இருக்கும் உடல் அழகை வெளிப்படுத்தும் விதமாக, இடுப்பில் கை வைத்து எடுப்பாக போஸ் கொடுத்து வியக்க வைத்த புகைப்படம்.

 

910

கியூட் லெஹங்காவில் பேரழகில் ஜொலிக்கும் நடிகை சாய் தன்ஷிகா. உடைக்கு ஏற்ற போல் விதவிதமாக நகை அணிந்து ஜொலிக்குறாங்களே...

 

1010

எப்படியும் பட வாய்ப்பை பிடிப்பதில் தீவிரம் காட்டி வரும் சாய் தன்ஷிகா... இப்படியெல்லாம் புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.. அதற்க்கு கை மேல் பலன் கிடைத்தது போல் தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories