தமிழ் சினிமாவில் முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, அதில் நடித்த நடிகையைப் பற்றி ஆஹா... ஒஹோ... என புகழ்ந்து பேசினாலும் அடுத்த சில படங்களிலேயே அட்ரஸ் இல்லாமல் போய் விடுவது தொடர்கதையாகி வருகிறது. அப்படி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை சதா.
2003ம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ஜெயம் படத்தில் சதா அறிமுகமானார். அதன் பின்னர் அஜித், விக்ரம், மாதவன் என முன்னணி நடிகர்கள் பலருடன் அடுத்தடுத்து நடித்து வந்தார்.
புதுமுகங்களை வரவு அதிகமானதாலும், சினிமாவில் கவர்ச்சி காட்ட மாட்டேன் என அடம்பிடித்ததாலும் வாய்ப்புகளை இழந்த சதா. கடைசியாக வடிவேலு ஹீரோவாக நடித்த எலி படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நிலைக்கு ஆளானார்.
கடைசியாக விலைமாது கதாபாத்திரத்தில் இயக்குநர் மஜித் இயக்கிய டார்ச்லைட் படத்தில் நடித்தார். பிக்பாஸ் ரித்விகா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் சதா, இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார். அப்படி சதா நடத்திய கிளாமர் போட்டோ ஷூட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தற்போது பட வாய்ப்பை பிடிக்க, உடல் எடையை குறைத்து, அழகை வெளிப்படுத்தும் வகையில் போட்டோஸ் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் நீச்சல் குளத்தில் இருந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
37 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் சதா உள்ளார் என, அவரை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.