சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான “இறுதிச்சுற்று” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.
முதல் படம் சூப்பர் ஹிட் என்பதால் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கு வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” போன்ற படங்களில் நடித்தார்.
பெரிய நடிகர்கள் படங்கள் என்றாலும், இந்த படத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது ஏமாற்றத்தை கொடுத்தது. பின்னர் நடிகர்கள் முக்கியம் இல்லை... கதை தான் முக்கியம் என்பதை தெரிந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.
அப்படி இவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த படம் தான் "ஓ மை கடவுளே", அசோக் செல்வன் ஜோடியாக ரித்திகா சிங் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இவரது கை வசம் மூன்று படங்கள் உள்ளது. பாக்ஸர், வணங்காமுடி, மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
எனினும் அவ்வப்போது பட வாய்ப்புகளை கை பற்றுவதில் அதிக முனைப்பு காட்டி வரும் ரித்திகா சிங், விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் பிரீமியர் ஷோவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம குண்டாக மாறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் ரித்திகா சிங். இந்த புகைப்படங்கள் தற்போது படு வைரலாகி வருகிறது.