பிரபல நடிகருடன் ஜோடி போட்ட சாய் பல்லவி... வயிற்றெரிச்சலில் வாயை விட்ட ராஷ்மிகா மந்தனா...!

First Published | Jun 25, 2020, 2:18 PM IST

மலையாளத்தில் ஹிட்டடித்து, தமிழில் கால் பதித்து, இப்போது தெலுங்கில் வெற்றிக்கொடி நாட்டியுள்ள சாய் பல்லவியை பார்த்து பிரபல நடிகை பொறாமையில் பொங்கி தவிக்கிறாராம். என்ன சங்கதி என தெரிந்து கொள்ளலாம் வாங்க... 
 

நடிகைகள் சிலர் பத்து படங்களில் நடித்தாலும் கூட சொல்லிக் கொள்வது போல் ஒரு கேரக்டரோ, பாடலோ கிடைக்காது. ஆனால் சில நடிகைகள் ஒரே படத்தில் தேசிய புகழ் அடைவார்கள்.
ஆனால் நடிகை சாய் பல்லவியோ இவை அத்தனையையும் தூக்கி சாப்பிட்டவர். தாறுமாறான நடன திறமை, பாந்தமான அழகு, நீட் நடிப்புத்திறமை இவை அனைத்தும் கலந்த ஒரு கலவைதான் சாய் பல்லவி.
Tap to resize

சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் கன்னாபின்னா ஹிட்டடித்த ‘பிரேமம்’ படத்தின் ‘மலர் டீச்சர்’ பாத்திரத்தால் மலையளவு ஹிட்டடித்தார். அந்தப் படம் அவரை தென்னிந்தியா முழுக்க அடையாளப்படுத்தியது.
அதன் பின் தனுஷுடன் அவர் நடித்த ‘மாரி 2’ படத்தில், ‘ரெளடி பேபி’ பாடலில் அவர் ஆடிய நடனமோ இன்று உலக அளவில் டிரெண்டிங் பாடல்களில் ஒன்றாக உள்ளது. இப்படி ஒரு படம், ஒரு பாடல் என சிம்பிள் ரூட்டில் செம்ம உச்சம் தொட்டவர் சாய்பல்லவி.
தற்போது தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அங்கும் சாய் பல்லவி நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ஹிட்டடிக்க தெலுங்கு வாலாக்களின் மனதையும் கவர்ந்துவிட்டார்.
டாக்சிவாலா படம் புகழ் ராகுல் சங்க்ரித்யான் இயக்கத்தில் நாக வம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பில் நானி நடிக்கவிருக்கும் படம் ஷ்யாம் சிங்க ராய்.
இந்த படத்தில் நானியுடன் நடிக்க போவது இரண்டு ஹீரோயின்களாம். அதில் ஒருவராக சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இரண்டாவது ஹீரோயின் கேரக்டருக்கு தெலுங்கு ரசிகர்களின் மனதை ஏற்கனவே கொள்ளை கொண்ட ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்யலாம் என அவரை அணுகியுள்ளனர்.
ராஷ்மிகாவோ முதலிலேயே சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தமான செய்தியை கேள்விப்பட்டு, நானி படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.
கோடிகளில் சம்பளத்தை அதிகரித்து கொடுப்பதாக கூறியும் ராஷ்மிகா மந்தனா மசியவில்லையாம். ஸ்ரிக்ட்ராக நடிக்க முடியாது என தயாரிப்பாளரிடம் மறுத்துவிட்டாராம்.
சாய் பல்லவி தனது நடிப்பு மற்றும் நடன திறமையால் ரசிகர்கள் மனதை திருடிவிடுவார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இதனால் தான் அவருடன் நடித்தால் தன்னை ரசிகர்கள் பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள் என கணித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
சாய் பல்லவி நடிப்பில் வெற்றி பெற்றுவிட்டால் நம்மை டம்மியாக்கி விடுவார்கள் என்ற பொறாமையில் தான், கோடிகளை கொட்டிக்கொடுத்தாலும் நடிக்க மறுத்துள்ளார் ராஷ்மிகா.

Latest Videos

click me!