
கன்னட சினிமாவில் ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக 'கிரிக் பார்ட்டி' என்கிற படத்தில் நடித்தவர் தான் ராஷ்மிகா மந்தனா. 2016-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, தன்னுடைய இரண்டாவது படத்திலேயே, புனீத் ராஜ்குமாருக்கு ஜோடி போட்ட ராஷ்மிகா பின்னர் தெலுங்கு திரையுலகிலும் கால் பதித்தார்.
பின்னர் கீதா கோவிந்தம் படத்தில், ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிசியாக நடித்து வந்த போது தான், தமிழில் நடிகர் கார்திக்கு ஜோடியாக 'சுல்தான்' படத்தில் நடித்திருந்தார்.
பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போடும் சாவா, 3 நாளில் ரூ.116 கோடி வசூல் – ராஷ்மிகாவின் 2ஆவது ஹிட்!
இதை தொடர்ந்து, பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ராஷ்மிகா... தற்போது 3 வருடங்களில் ரூ.3000 கோடிக்கு மேல் வசூல் செய்த நாயகி என்கிற பெருமையை பெற்றுள்ளார். அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை இவர் நடிப்பில் வெளியான படங்கள் தான் இந்த சாதனையை படைத்துள்ளது.
ராஷ்மிகா நடிப்பில் 2023-ஆம் ஆண்டு, விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' மற்றும் 'அனிமல்' ஆகிய படங்கள் வெளியானது. அதே போல் 2024-ஆம் ஆண்டு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த 'புஷ்பா 2', திரைப்படமும்... இந்த ஆண்டின் துவக்கத்திலேயே 'சாவா' படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இதில், 'வாரிசு' திரைப்படம் ரூ.300 கோடி வசூலையும், 'அனிமல்' திரைப்படம் ரூ.900 வசூல் கோடியையும் அள்ளியது. கடந்த ஆண்டு வெளியான, புஷ்பா 2 திரைப்படம் ரூ.1800 கோடி வசூல் செய்த நிலையில், இந்த ஆண்டு சாவா தற்போது வெறும் 3 நாட்களில் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது.
சொந்த ஊரையே மறந்து சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா: இப்படி சொல்லி மாட்டிக்கிட்டாங்களே!
மொத்தத்தில், இவர் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளது மட்டும் இன்றி, இதுவரை ரூ.3000 கோடி வசூலை பெற்ற கதாநாயகியாக மாறியுள்ளார். ஆனால் இவருக்கு முன்பு சுமார் 20 வருடங்களாக திரையுலகில் ஹீரோயின்களாகவே நடித்து வரும், த்ரிஷா - நயன்தாரா போன்ற நடிகைகள் இப்போது சம்பள விஷயத்தில் உச்சத்தை அடைந்திருந்தாலும், இப்படி ஒரு வசூல் சாதனையை செய்ய தவறி விட்டதாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில், நயன்தாரா நடிப்பில் 2023-ல் நயன்தாரா இந்தியில் நடித்த 'ஜவான்' திரைப்படம் மட்டுமே சுமார் ரூ.1200 கோடி வரை வசூல் செய்தது. இதை தொடர்ந்து அதே ஆண்டு வெளியான இறைவன் மற்றும் நயன்தாராவின் 75-ஆவது படமான 'அன்னபூரணி' ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தது. 2024-ல் நயன் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், இந்த ஆண்டும் இதுவரை இந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.
நயன்தாராவை போல் 20 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் த்ரிஷா நடிப்பில், 2023-ல் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரூ.345 கோடி வசூல் செய்தது. இதை தொடர்ந்து அதே ஆண்டு விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்த லியோ திரைப்படம் ரூ.600 கோடி வசூல் செய்தது. கடந்த வருடம் த்ரிஷா நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், இந்த ஆண்டு வெளியான விடாமுயற்சி ரூ.200 கோடியை எட்ட முடியாமல் திணறி வருகிறது.
மொத்தத்தில் பார்த்தல், 20-வருட கதாநாயகிகளான நயன் - த்ரிஷாவுடன் ஒப்பிடும் போது.. ராஷ்மிகா, மூன்று மடங்கு அதிகம் வசூல் செய்த படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு தமிழ் - தெலுங்கில் தயாராகும் 'குபேரா', ஹிந்தியில் தயாராகும் 'சிக்கந்தர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.