நடிகை ரம்யா நம்பீசன், மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார்.
ஆனசந்தம் என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
அழகான குரலுக்கும் சொந்தக்காரரான நடிகை ரம்யா நம்பீசன், மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.
தமிழில் இவர் கடந்த 2012-ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையடுத்து வைபவ்வுக்கு ஜோடியாக டமால் டுமீல், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக குள்ளநரி கூட்டம், அருள்நிதிக்கு ஜோடியாக நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சேதுபதி என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து அசத்தினார்.
தற்போது தமிழில் நடிகை ரம்யா நம்பீசன், கைவசம் விஜய் ஆண்டனியின் தமிழரசன், சிபி சத்யராஜுக்கு ஜோடியாக ரேஞ்சர், பிரபுதேவாவுடன் பஹீரா மற்றும் மை டியர் பூதம் போன்ற படங்கள் உள்ளன.
பிசியாக நடிகையாக வலம் வந்தாலும், இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு எதிர்பார்த்தபடி அமையவில்லை. இதனால் அவ்வப்போது விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வாய்ப்பு தேடி வருகிறார்.
அந்த வகையில் தற்போது ரெட் வெல்வெட் நிற சுடிதாரில் அழகு தேவதை போல் பளீச் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.