ராதாவாக மாறிய உதய சந்திரா - எப்படி, எதற்காக? யாருக்கும் தெரியாத உண்மை கதை இதோ!

Published : Mar 19, 2026, 01:42 PM IST

Radha Original name Udaya Chandra History: நடிகை ராதாவின் அசல் பெயர் உதய சந்திரா என்பது உங்களுக்குத் தெரியுமா? பாரதிராஜா ஏன் அவர் பெயரை மாற்றினார்? அந்த சுவாரசியமான பின்னணி இதோ!

PREV
15
நடிகை ராதா சினிமா பின்னணி

உதயச்சந்திரா என்று இயற்பெயர் கொண்ட இவர் ராதா என்று அழைக்கப்பட்டார். அதற்கு காரணம் இயக்குனர் பாரதிராஜா.

அம்பிகாவை ஒரு முறை அவரின் தாய் மலையாளத்தில் பாரதிராஜா இயக்கிய திரைப்படத்திற்கு அழைத்து சென்றார். அப்போது அவர் பார்ப்பதற்கு மலையாள பெண் போல் இருப்பதால் வாய்ப்பு கொடுக்கவில்லை.

25
ராதாவின் சினிமா என்ட்ரி

பின்னர் அவரின் தாய் தனது மூன்று மகள்களின் புகைப்படத்தை பாரதிராஜாவிடம் காண்பித்தார். அப்போது ராதாவை பார்த்து இந்தப் பெண் என் படத்திற்கு சரியாக இருப்பார் என நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் தான் வீட்டில் வந்து ராதாவிடம் இது குறித்து பேசுகிறேன் என்ன சொல்லி உள்ளார்.

ஒரு சில தினங்கள் கழித்து அவரின் வீட்டிற்கு சென்று ராதாவிடம் நடிப்பிற்கு வர சம்மதமா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் பாரதிராஜா. ராதா சம்மதம் தெரிவிக்கவே அப்படித்தான் அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். அந்தப் படத்தில் பானுமதி நடிப்பதாக இருந்த நிலையில் கால்ஷீட் பிரச்சினை இருந்ததால் அவர் நடிக்க வரவில்லை. அலைகள் ஓய்வதில்லை படம் நடிக்கும் போது நடிகை ராதா ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்து இருந்தார். அதற்குப் பிறகு அவர் பள்ளிக்கூடமும் செல்லவில்லை.

35
நடிகை ராதாவின் சினிமா வாழ்க்கை

தனக்கு மலையாள மட்டுமே தெரியும் என்பதால் படத்தில் வரும் வசனங்கள் அனைத்தையும் மலையாளத்தில் எழுதி வைத்துவிட்டு தமிழில் பேசி இருக்கிறார். அதுதான் அவரின் முதல் படமா என்று கேள்வி கேட்கும் வகையில் அவரின் நடிப்பு பேசப்பட்டது.

முதல் படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த கார்த்தியுடன் இணைந்து அவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். தங்களை அனைவரும் லக்கி ஜோடி என்றுதான் அழைப்பார்கள் என ஒருமுறை பேட்டியில் கூட தெரிவித்திருந்தார்.

45
உதய சந்திரா, ராதாவான கதை

உதயச்சந்திரா என்று இயற்பெயர் கொண்ட இவர் ராதா என்று அழைக்கப்பட்டார். அதற்கு காரணம் இயக்குனர் பாரதிராஜா. பொதுவாக பாரதிராஜாவிற்கு ஒரு பழக்கம் இருக்கிறது. தன் படம் மூலம் அறிமுகமாகும் ஹீரோயின்களுக்கு அவர்தான் பெயரை மாற்றி வைப்பார் அதிலும் ரா என்ற பெயரில் தான் அவர்களை அழைப்பார். அதனால்தான் உதயச்சந்திரா என்ற பெயரை ராதா என மாற்றி வைத்தார். ஆரம்பத்தில் அவர் பெயர் மாற்றியது ராதாவிற்கு சற்றும் பிடிக்கவில்லை. பின்னர் அனைவரும் அவர் பெயர் மாற்றி வைத்த நடிகைகள் பெரிய அளவில் இருப்பதாக சொல்லி அவரை சமாதானம் செய்தனர்.

55
டாப் நடிகைகள்

சிவாஜி கணேசனுடன் இணைந்து முதல் மரியாதை திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது சிவாஜி கணேசன் தங்கள் இருவரின் நட்பு பாரதிராஜாவிற்கு திருப்தி தரவில்லை என்பதால் நாம் கூடுதலாக நடிக்க வேண்டும் என்று கூறினார். அதற்குப் பிறகு பாரதிராஜாவின் எதிர்பார்ப்புக்கு இணங்க கிராமத்து பெண்ணாக ராதா கலக்கல் ஆன நடிப்பை கொடுத்து அவரை அசத்தினார். அந்தப் படத்தில் அவருக்கு நடிகை ராதிகா டப்பிங் கொடுத்திருந்தார். அந்த ஒரே காரணத்தினால் அவருக்கு அந்தப் படத்திற்காக தேசிய விருது கிடைக்காமல் போனது.

குறுகிய காலத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் சிவாஜி கணேசன் விஜயகாந்த் பிரபு கார்த்திக், சத்யராஜ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அப்போது டாப் நடிகைகளில் இடம் பிடித்திருந்த அவரின் சகோதரி அம்பிகாவுடன் இணைந்து எங்கேயோ கேட்ட குரல் காதல் பரிசு அண்ணா நகர் முதல் தெரு இதய கோவில் மற்றும் வெள்ளை ராஜா உள்ளிட்ட படங்களிலும் இணைந்து நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் கலக்கி வந்த ராதாவிற்கு 1991 ஆம் ஆண்டு வெளிவந்த சாந்தி என் சாந்தி திரைப்படம் தான் கடைசி படம். இயக்குனர் டி ராஜேந்தர் அப்படத்த இயக்க இறந்தார். அதற்குப் பிறகு ராதா எடுத்த முடிவு ரசிகர்கள் மனதில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories