பாவனா தான் இறந்துவிட்டாரே?... பிரபல நடிகரின் கொச்சை பேச்சால் கடுப்பான நடிகை பார்வதியின் அதிரடி முடிவு...!

First Published Oct 13, 2020, 2:13 PM IST

ஆனால் இதில் நடிகை பாவனா மட்டும் இல்லை. ஏனென்றால் அவர் தற்போது நடிகர் சங்கத்தில் உறுப்பினர் கிடையாது. இறந்து போன ஒருவர் எப்படி உயிருடன் வர முடியும்? என கேள்வி எழுப்பினர்.

இந்தியா சினிமாவில் பல்வேறு விஷயங்களுக்கு மலையாள திரையுலகம் முன்னூதாரணமாக இருந்துள்ளது. தற்போதைய நெருக்கடி நிலையை புரிந்து கொண்டு, குறிப்பாக முன்னணி நடிகர்கள் தங்களாகவே முன்வந்து சம்பளத்தை குறைத்துக் கொண்டதை கூறலாம்.
undefined
கொரோனாவால் முடங்கி கிடக்கும் மலையாள திரையுலகிற்கு நிதி திரட்டும் வகையில் படம் ஒன்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2008ம் ஆண்டு மலையாளத்தில் டுவென்டி-20 என்ற படம் வெளியானது.
undefined
இதில் உச்ச நட்சத்திரங்களான மம்முட்டி, மோகன் லால், சுரேஷ் கோபி, ஜெய்ராம், திலீப் உட்பட மலையாள நடிகர், நடிகைகள் பலரும் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதோடு வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது. தற்போது நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக அதேபோல் அனைத்து நட்சத்திரங்களையும் ஒருங்கிணைத்து ஒரு படத்தை தயாரிக்க மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா முடிவெடுத்துள்ளது.
undefined
இதுகுறித்து அந்த சங்கத்தின் செயலாளரான இடைவேளை பாபு டுவென்டி-20 படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளும் மீண்டும் நடிக்க உள்ளனர்.
undefined
ஆனால் இதில் நடிகை பாவனா மட்டும் இல்லை. ஏனென்றால் அவர் தற்போது நடிகர் சங்கத்தில் உறுப்பினர் கிடையாது. இறந்து போன ஒருவர் எப்படி உயிருடன் வர முடியும்? என கேள்வி எழுப்பினர்.
undefined
அம்மா சங்கத்தின் செயலாளரான இடைவேளை பாபு பாவனா குறித்து இப்படி பேசியது அவருடைய நெருங்கிய தோழியும், சக நடிகையுமான பார்வதிக்கு கடும் கோவத்தை உருவாக்கியுள்ளது.
undefined
இடைவேளை பாபுவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பார்வதி, நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2018ல் என்னுடைய சில நண்பர்கள் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விலகினர். ஆனால் நான் விலகாமல் தொடர்ந்து நீடித்து வந்தேன். அதற்கு காரணம் உண்டு.
undefined
அழிந்து கொண்டிருக்கும் நடிகர் சங்கத்தை சீரமைக்க சிலராவது வேண்டுமே எனக் கருதியதால் தான் நான் நடிகர் சங்கத்தில் தொடர்ந்தேன். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை போய்விட்டதால் விலகுகிறேன் எனக்கூறியுள்ளார்.
undefined
இடைவேளை பாபுவின் வார்த்தைகள் ஒருவித வெறுப்பை உருவாக்கிவிட்டது. அது வெட்க கேடானது. இனியும் இந்த சங்கத்தில் தொடர்வதால் எந்த பலனும் இல்லை. அதனால் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.
undefined
click me!