வெற்றி கொண்டாட்டத்தில் விக்கி - நயன்தாரா... தாறுமாறு வைரலாகும் கூல் போஸ் போட்டோ...!

Published : Aug 08, 2021, 05:25 PM IST

நெதர்லாந்து நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற  ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று, ‘டைகர்’ விருதை தட்டிச் சென்றது.

PREV
15
வெற்றி கொண்டாட்டத்தில் விக்கி - நயன்தாரா... தாறுமாறு வைரலாகும் கூல் போஸ் போட்டோ...!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்து வரும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்திற்கு இணை தயாரிப்பாளராக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் உள்ளது.சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராக்கி' படத்தின் விநியோக உரிமையை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார்.

25

நயன்தாரா பார்வையற்றவராக நடிக்கும் ’நெற்றிக்கண்’ படத்தை தங்களது ரெளடி பிக்சர்ஸ் சார்பாக தயாரித்துள்ளார் விக்னேஷ் சிவன். அடுத்ததாக ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை தயாரித்துவரும் இந்த ஜோடி, இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் ‘ராக்கி’ படத்தின் வெளியீட்டு உரிமையை சமீபத்தில்தான் கைப்பற்றியது.

35

இந்த நிறுவனம் அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான கூழாங்கல் படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது.

அதுமட்டுமின்றி அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான கூழாங்கல் படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

45
Nayanthara

இந்த படம்  நெதர்லாந்து நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற  ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று, ‘டைகர்’ விருதை தட்டிச் சென்றது. இந்த விழாவிற்கான தேர்வின் போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பாரம்பரியமான வேஷ்டி புடவையில் சென்று பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

55
Nayanthara

கொரோனா பரவல் காரணமாக விருது வழங்கும் நிகழ்ச்சியில் நயன் - விக்கி ஜோடி பங்கேற்க முடியாமல் போனது. தற்போது அந்த விருது சென்னை வந்துள்ளது. அந்த விருதுடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் உற்சாகமாக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் ‘கூழாங்கல்’ என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!

Recommended Stories