Nandita Swetha Open Talk About Her Childhood: நடிகை நந்திதா ஸ்வேதா சிறுவயதில் இருந்தே தனக்கு இருந்த ஆசை பற்றியும், கைவிட்டு போன வெற்றி படங்கள் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா. சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக, படிப்பை முடித்த கையேடு திரைத்துறையில் வாய்ப்பு தேட துவங்கினார். தீவிர தேடுதலுக்கு பின்னர், கன்னடத்தில் 'நந்தா லவ்ஸ் நந்திதா' என்கிற படத்தில் அறிமுகமானார். இந்த படம் படுதோல்வியை சந்தித்ததால் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
25
பா ரஞ்சித் கொடுத்த வாய்ப்பு:
தமிழ் சினிமாவில் நந்திதா வாய்ப்பு தேடி வந்த போது தான், இயக்குனர் பா.ரஞ்சித் தான் இயக்கிய 'அட்டகத்தி' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்தின் வெற்றியால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்படும் நடிகையாக நந்திதா மாறினார். கதை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கிய நந்திதா, அட்டகத்தி படத்திற்கு பின்னர் நடித்த எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என இவர் நடித்த படங்கள் அனைத்துமே வரிசையாக ஹிட் அடித்தது.
35
குறையும் பட வாய்ப்புகள்:
இதுவரை தமிழில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நந்திதா நடித்திருந்தாலும், ஏனோ இவரால் முன்னணி ஹீரோயின் என்கிற இடத்தை பிடிக்க முடியாமல் போனது. தமிழ் மொழி படங்களை தவிர தெலுங்கு மொழியிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். நந்திதா தற்போது 35 வயதை எட்டி விட்டதால், பட வாய்ப்புகள் குறைய துவங்கி உள்ளனர். காதும் காதும் வைத்தது போல இவரது கல்யாண பேச்சுகளும் குடும்பத்தினர் மத்தியில் நடந்து வருகிறதாம்.
45
சினிமா பைத்தியம் நான்:
இந்நிலையில், தான் தற்போது நந்திதா தனது சினிமா பயணம் குறித்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " நான் ஒரு சினிமா வெறி பிடித்தவள். சின்ன வயதில் இருந்தே சினிமா மீது பைத்தியமாக தான் இருந்தேன். யாரவது நீ என்னவாக ஆசைப்படுகிறாய் என்று கேட்டல்... சற்றும் யோசிக்காமல் நான் ஒரு நடிகை ஆகப் போகிறேன் என கூறுவேன்.
55
சினிமா கற்றுக்கொடுத்த பாடம்:
அதே நேரம் சினிமாவில் எதுவும் நிரந்தரம் கிடையாது. ஒரு படம் ஹிட் அடித்துவிட்டால் நான் தான் பெரிய ஆள் என்று ஒருபோதும் நினைக்க கூடாது. அதுதான் மிகப்பெரிய பொய். சினிமாவில் நான் கற்றுக்கொண்ட பெரிய பாடம் பொறுமை தான். நான் நடிக்க முடியாது என்று உதறித் தள்ளிய நிறைய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. முடிந்தது முடிந்தது தான், அதற்காக கவலைப்படுவது முட்டாள் தானம் என்றே சொல்லுவேன் என ஓபனாக சில விஷயங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்துள்ளார்.