Mirnalini Ravi Buys a New Limited Edition Car: நடிகை மிர்னாலினி ரவி, லிமிடெட் எடிஷனாக விற்பனைக்கு வந்த கார் ஒன்றை வாங்கி ஒய்யாகரமாக போஸ் கொடுத்துள்ளார்.
புதுச்சேரியில் பிறந்து வளர்ந்து இன்று முன்னணி இளம் நடிகையாக மாறி இருப்பவர் மிர்னாலினி ரவி. கடந்த ஆண்டு பெங்களூரில் புதிய வீடு வாங்கி குடியேறிய இவர், இந்த ஆண்டு தனக்கு பிடித்த லிமிடட் எடிஷன் கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
25
சோசியல் மீடியா பிரபலம்:
கடந்த சில வருடங்களாக நடிப்பில் ஆர்வம் இருக்கும் பலருக்கும் சோசியல் மீடியா பெரிய அளவில் உதவி வருகிறது. அப்படி சோசியல் மீடியா பக்கம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் மிர்னாலினி. டிக் டாக் மற்றும் டப் மேட்ச் போன்ற செயலிகள் மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி, சில சினிமா வாய்ப்பை பெற்றார்.
35
சூப்பர் டீலக்ஸ் மூலம் அறிமுகம்:
2019-ம் ஆண்டு இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஒரு ஏலியனாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தனக்கான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட மிர்னாலினி சாம்பியன் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தை சுசீந்திரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் பெரிதாக கவனிக்கப்படவில்லை என்றாலும், அடுத்தடுத்த வாய்ப்புகள் இவருக்கு தேடிவர துவங்கின.
45
தெலுங்கிலும் ஆர்வம் காட்டும் மிர்னாலினி ரவி:
சசிகுமாருக்கு ஜோடியாக எம்.ஜி.ஆர் மகன், விஷாலுக்கு ஜோடியாக எனிமி போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த ரோமியோ படம் ரிலீஸ் ஆனது. தமிழை தொடர்ந்து தெலுங்கு மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், மிர்னாலினி ரவி தற்போது வாங்கி இருக்கும் ஸ்பெஷல் கார் பற்றிய தகவலை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
55
மிர்னாலினி ரவி வாங்கிய காரின் விலை:
இந்த ஆண்டு மஹிந்திரா நிறுவனம் Mahindra BE 6 Batman Edition காரை அறிமுகப்படுத்தியது. பேட் மேன் ரசிகர்களுக்காக பிரேதேயகமாக டிசைன் செய்யப்பட்ட இந்த கார் ஒரு லிமிடட் எடிஷனாக விற்பனைக்கு வந்தது. இந்த ரக கார்கள் 999 மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரை தான் மிர்னாலினி ரவி வாங்கி இருக்கிறார். இதன் விலை சுமார் 33 லட்சம் என கூறப்படுகிறது. மிர்னாலினி காருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது. ஸ்பெஷல் காரை வாங்கி இருக்கும் இவருக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்