நேபாள வெள்ளப் பேரழிவை முன்பே கணித்த பஞ்சாங்கம்! நடிகை நளினி பகிர்ந்த தகவல்!

Published : Aug 31, 2026, 06:25 PM IST

Actress Nalini: நேபாள பெரு வெள்ளம் குறித்து நமது ஜோதிடப் பஞ்சாங்கத்தில் ஏற்கனவே துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது என்று நடிகை நளினி தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
13
காஞ்சிபுரத்தில் உதயமான ‘ஸ்ரிஷ்டி தெய்வீக எம்போரியம்’

தமிழகத்தின் ஆன்மிக பூமியான காஞ்சிபுரத்தின் முக்கியப் பகுதியான மேற்கு ராஜ வீதியில், உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ சங்கர மடத்திற்கு நேர் எதிரே ‘ஸ்ரிஷ்டி தெய்வீக எம்போரியம்’ என்ற பெயரில் ஆன்மீகப் பொருட்களுக்கான புதிய மொத்த மற்றும் சில்லறை விற்பனையகம் கோலாகலமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விற்பனை மையத்தின் திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பழம்பெரும் நடிகை நளினி, விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்து, முதல் விற்பனையையும் முறைப்படி தொடங்கி வைத்தார்.

ஆன்மீகப் பொருட்களின் கலைக்கூடமாக ஸ்ரிஷ்டி

பக்தர்களின் ஆன்மீகத் தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் உருவாகியுள்ள இந்த மையத்தில், பழமை மாறாத பாரம்பரியமிக்க வழிபாட்டுப் பொருட்கள் மற்றும் நுட்பமான கலைநயத்துடன் வடிக்கப்பட்ட தெய்வச் சிலைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், வரவிருக்கும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, காண்போரைக் கவரும் வகையில் அமைக்கப்பட்ட பிரத்யேகக் கொலு பொம்மைகளின் பிரம்மாண்டமானத் தொகுப்பும் பொதுமக்களின் பார்வைக்கும் விற்பனைக்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

23
பஞ்சாங்கம் குறித்த நடிகை நளினியின் கருத்து

இந்த விற்பனை மையத்தின் திறப்பு விழாவை தொடர்ந்து நடிகை நளினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவான பெரு வெள்ளம் குறித்து நமது ஜோதிடப் பஞ்சாங்கத்தில் ஏற்கனவே துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுமக்கள் பஞ்சாங்கம் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே, அனைவரும் தினமும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்ப்பது மிகவும் நன்மை அளிக்கும்'' என்று தெரிவித்தார்.

33
மக்களிடையே பெரும் வரவேற்பு

ஆன்மீகப் பொருட்களுக்கான விற்பனை மையத்தின் திறப்பு விழாவில் ஆன்மீக மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதாவது தொழில் அதிபர் வி.ஜி. சந்தோசம், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர், புகழ்பெற்ற தமிழ்ச் சொற்பொழிவாளர் மற்றும் எழுத்தாளர்

தாமல் கோ. சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி ஆன்மீக அன்பர்களிடையே இந்தப் புதிய 'ஸ்ரிஷ்டி ஆன்மீகப் பொருட்கள் விற்பனையகம்' குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பையும் ஈர்ப்பையும் பெற்றுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories