நடிகை மீனா, தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி... ரஜினி, கமல், விஜய், அஜித், அர்ஜுன், நவரச நாயகன் கார்த்தி என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர்.
திருமணத்திற்குப் பிறகு அக்கா மற்றும் குழந்தைகளுக்கு அம்மா உள்ளிட்ட சீனியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவரை தொடர்ந்து இவரது மகள், நைனிகாவும்.... தளபதி விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடித்த, 'தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருந்தார்.
மகளும் நன்கு வளர்ந்து விட்டதால், மீனா வெப் சீரிஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிப்பதில் செம்ம பிஸியாகியுள்ளார்.
ஒரு சில டான்ஸ் ஷோக்களில் நடுவராகவும் இருந்துள்ளார்.
மேலும் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார்.
கொரோனா பிரச்சனைக்கு பின், கடந்த மாதம் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பில் பல்வேறு பாதுகாப்புகளை மீறி, நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். எனவே தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தலைவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மீனா அடுத்த ரவுண்டுக்கு தயாராகி உள்ளதால்... அவ்வப்போது கலக்கல் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.