பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு மிகப்பெரிய புகழ் வெளிச்சம் கிடைத்தது.
28
அந்நிகழ்ச்சியில் கவினுக்கும், லாஸ்லியாவிற்கும் இடையே மலர்ந்த காதல், வெளியே வந்த பிறகு பெரிதாக நீடிக்கவில்லை. இருவரும் பிரிந்து விட்டனர்.
38
இதை தொடர்ந்து தற்போது இருவருமே அவரவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் லாஸ்லியா நடிப்பில் சமீபத்தில் ஃபிரென்ட்ஷிப் திரைப்படம் வெளியானது.
48
இதுதவிர பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என லாஸ்லியாவுக்கு அடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
58
குறிப்பாக இதில் பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ள 'கூகுள் குட்டப்பன்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார்.
68
தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிக்க வழக்கமாக ஹீரோயின்கள் பின்பற்றும் அதே பார்முலாவை தற்போது லாஸ்லியாவும் பாலோ பண்ணி வருகிறார்.
78
இவர் நடத்தும் போட்டோஷூட்டிற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஆரஞ்ச் நிற டீசர்ட் அணிந்த படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
88
அந்த போட்டோவில் நடிகை லாஸ்லியா இடுப்பை வளைத்து காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளதால், அதற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.