அடேங்கப்பா நடிகை குஷ்புவா இது?... 50 வயசிலும் அழகில் மெருகேறி மார்டன் லுக்கில் ஜொலிக்கும் போட்டோ...!

First Published | Oct 20, 2020, 8:35 PM IST

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு அட்டகாசமான போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு.
90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர்.
Tap to resize

அப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வள்ளியாக சுற்றிச் சுழல்கிறார்.
தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்துள்ள குஷ்பு அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள குஷ்பு பேண்ட், சட்டையில் செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
50 வயதானாலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக அழகில் மெருகேறி ஜொலிக்கும் குஷ்புவின் இந்த போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

Latest Videos

click me!