Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!

Published : Nov 01, 2026, 08:52 AM IST

Keerthy Suresh Bold Statement : ட்ரோல்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க மாட்டேன் என்றும், தனது வேலையே அதற்கு பதில் சொல்லும் என்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

PREV
13
Keerthy Suresh About Trolls

"நான் எப்போதுமே ட்ரோல்களுக்கு பதில் சொன்னதில்லை, இனிமேலும் சொல்ல மாட்டேன். சோஷியல் மீடியால உட்கார்ந்துட்டு என்னை பத்தி பேசுறவங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஆளுக்கு ஆள் கருத்துக்கள் மாறத்தான் செய்யும். சிலருக்கு என்னை பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது, அதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது. என் வேலையை உண்மையா, சரியா செய்யணும், அதுல மட்டும் தான் என் கவனம் இருக்கு. என் வேலையே எல்லாத்துக்கும் பதிலா அமையும்னு நான் நம்புறேன்."

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்ட போது தான் இப்படி அழுத்தமாக பதிலளித்துள்ளார். சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனக்கு வந்த விமர்சனங்களுக்கு பதிலளித்திருந்த நிலையில், கீர்த்தி சுரேஷின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில் ரசிகர்களை பற்றியும் இரண்டு முக்கியமான விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

Keerthy Suresh: ஒரு பாட்டுக்கு 1 கோடி சம்பளமா? காட்டுத்தீ போல் பரவிய தகவல்... 'தி பாரடைஸ்' படக்குழு விளக்கம்

23
கிடைத்த அரிய வாய்ப்பு

ரசிகர்கள் தர்ற ஆதரவால தான் நாங்க இந்த அளவுக்கு வளர்ந்திருக்கோம். அவங்களோட பேசுறதும் பழகுறதும் நம்ம கடமை. விமானத்துல பயணம் செய்யும்போது சாதாரண மக்கள்கூட பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா, சினிமா வாழ்க்கையை தாண்டி சாதாரண மக்களை சந்திக்க அது ஒரு நல்ல வாய்ப்பு.

சிலர் ரொம்ப வெள்ளந்தியா, மணி கணக்கில அன்பா பேசுவாங்க. கடைசியில ஒரு போட்டோ கூட கேட்க மாட்டாங்க. ஆனா இன்னும் சிலர், நம்ம தனிப்பட்ட எல்லைக்குள்ள நுழைஞ்சு தொந்தரவு பண்ணுவாங்க. இந்த மாதிரி சங்கடமான சூழல்களை நாங்க எதிர்கொண்டு தான் ஆக வேண்டியிருக்கு.

இப்படியொரு அழகான காதல் கதையை பார்த்து ரொம்ப நாள் ஆனது – NEEK படத்திற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு!

33
செல்ஃபி கேட்டு அடம் பிடித்த நபர்!

சமீபத்துல நான் மிலன் நகரத்துல இருந்து இந்தியாவுக்கு திரும்பிட்டு இருந்தப்போ ஒரு மோசமான சம்பவம் நடந்துச்சு. நான் ஒரு பக்கத்துலயும், என் கணவர் இன்னொரு பக்கத்துலயும் உட்கார்ந்திருந்தோம். அப்போ நல்லா குடிச்சிருந்த ஒருத்தன், சரியா நிற்க கூட முடியாம தள்ளாடிக்கிட்டே என் பக்கத்துல வந்து செல்ஃபி வேணும்னு அடம் பிடிச்சான். நான் 'இப்போ வேணாம், அப்புறம் பார்க்கலாம்'னு சொல்லி பார்த்தேன்.

ஆனா அவன் கேட்காம, 'பரவாயில்லை வாங்க'னு சொல்லி கட்டாயப்படுத்த ஆரம்பிச்சான். கடைசியில நான் சத்தமா 'நோ'னு சொல்ல வேண்டியதா போச்சு. பொதுவா என் கணவர் ரசிகர்கள்கிட்ட ரொம்ப மென்மையா தான் நடந்துப்பாரு. ஆனா அன்னைக்கு முதல் முறையா அவரும் கோபப்பட்டு சத்தம் போட்டாரு. அப்புறம் பிளைட் ஊழியர்கள் தலையிட்டு தான் அந்த நிலைமையை சரி பண்ணினாங்க.

முதன்முறையாக விஜய் தேவரகொண்டா உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் - அதுவும் யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories