தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.
சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு கணவர் உடன் புதிய வீட்டில் குடியேறியது முதல் மாலத்தீவில் ஹனிமூனை என்ஜாய் செய்தது வரை குதூகலமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார்.
மேலும்... குறையாத காதலுடன் அவ்வப்போது இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் காஜல் உரையாடியபோது கூட, திருமணத்திற்கு பிறகும் நான் நடிப்பதற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தன்னுடைய கணவர் கேட்டுக்கொண்டால் நடிப்பில் இருந்து விலகி விடுவேன் என கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது, வெளியாகியுள்ள தகவல் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறாரோ... என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காஜல் அகர்வாலை சந்தித்து கதை கூறி வந்தாலும், அவர் அனைத்தையும் காரணம் எதுவும் சொல்லாமல் நிராகரித்து வருகிறாராம்.
எனவே காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறாரோ? என்கிற சந்தேகத்தை பலர் எழுப்பி வருகிறார்கள். விரைவில் இதுகுறித்து காஜல் அகர்வால் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் நல்லவிஷயம் நடந்தால் சரி தான்...