அழகிய விழிகள், பார்வையான உதடு, சந்தன நிறம், மெல்லிய உடல் வாகு, தமிழ் பெண்ணுக்குரிய முக லட்சணம் என பார்த்ததுமே அனைவருக்கும் பிடித்து போகும் அளவிற்கு இருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் ஜனனி ஐயர். தெகிடி, அவன் இவன் போன்ற படங்கள் இவருக்கு கை கொடுத்தாலும், ஏனோ இன்னும் ரசிகர்கள் மனதில் பதியாத நடிகையாகவே இருக்கிறார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இறுதி வரை வந்தாலும் இவரால் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல முடியவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக இவரை பெரிதாக எந்த ஒரு படங்களிலும் பார்க்க முடியவில்லை என்றாலும், சமீபத்தில் வெளியான தர்ம பிரபு படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது, தொல்லைகாட்சி, கசட தபற மற்றும் பெயரிடப்படாத ஒரு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இவர் மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இதோ..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.