Hansika Motwani : மீண்டும் ஹன்சிகா..!! கைவசம் இத்தனை படங்களா..? லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கே!!

First Published Jan 4, 2022, 8:14 AM IST

2022-ம் ஆண்டு தனக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ள நடிகை ஹன்சிகா (Hansika), தனது கைவசம் உள்ள படங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

நடிகை ஹன்சிகா, அறிமுகமான போது குட்டி குஷ்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். புசு புசுனு இருந்த போது, தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி, நடித்த இவர் ஒல்லி பெல்லி உடல்கட்டுக்கு மாறிய பின்னர் எதிர்பார்த்ததை விட பட வாய்ப்புகள் மளமளவென குறைந்தது.

கடந்தாண்டு இவர் கைவசம் மகா என்கிற படம் மட்டுமே உள்ளது. இது அவரது 50-வது படம். இந்த படத்தில் ஹன்சிகாவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இதையடுத்து பட வாய்ப்பு கிடைக்காததால் தவித்து வந்த ஹன்சிகா, தாறு மாறாக கவர்ச்சி காட்டி கோலிவுட்டை கிறங்க வைத்தார். குறிப்பாக பிகினி உடையிலும் தாராளம் காட்டினார்.

தற்போது அவரது முயற்சிக்கு பலனாக, அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்துள்ளது. அதன்படி தனது கைவசம் 9 படங்களை வைத்துள்ளதாக ஹன்சிகா தெரிவித்துள்ளார். 

அதன்படி தற்போது அவர் கைவசம் பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம் இஸ் சுருதி, 105 நிமிடங்கள், மகா ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்திலும், சேட்டை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

மேலும் எம்.ராஜேஷ் இயக்கும் ஒரு படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஹன்சிகா. இப்படம் ஓடிடி தளத்துக்காக தயாராக உள்ளது. ஏற்கனவே ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் எம்.ராஜேஷும், ஹன்சிகாவும் இணைந்து பணியாற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த புத்தாண்டு தனக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக தொடங்கி உள்ளதாக நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

click me!