நடிகை, தயாரிப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் கெளதமி. இவர் கடந்த 1988-ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த குரு சிஷ்யன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த கெளதமி அறிமுக படத்திலேயே கவனம் ஈர்த்தார்.
25
இதையடுத்து அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், தர்மதுரை, தேவர்மகன் என தொடர்ந்து பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்த கெளதமி, ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1993-ம் ஆண்டு வெளிவந்த ஜெண்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்கிற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி அதிர்ச்சி கொடுத்தார். இப்பாடலும் வேறலெவலில் ஹிட் ஆனது.
35
நடிகை கெளதமி கடந்த 1998-ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 1999-ம் ஆண்டு சுப்புலட்சுமி என்கிற பெண் குழந்தையும் பிறந்தது. அந்த ஆண்டே தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் கெளதமி.
இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் மீது காதல் வயப்பட்ட கெளதமி, அவருடன் 12 ஆண்டுகள் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். இவர்களது காதல் வாழ்க்கை கடந்த 2016-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இவர் பாஜகவில் இணைந்து அரசியலில் தற்போது பிசியாக இயங்கி வருகிறார்.
55
இந்நிலையில், நடிகை கெளதமி தற்போது தனது மகளுடன் இணைந்து நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், 54 வயதிலும் நடிகை கெளதமி அழகில் தனது மகளுக்கே டஃப் கொடுப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை கெளதமியின் இந்த மாடர்ன் லுக் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.