அதிக 1000 கோடி வசூல் படங்களை வைத்திருக்கும் சூப்பர்ஸ்டார் யார்? ஷாருக்கான், பிரபாஸ் இல்ல..

அதிக 1000 கோடி வசூல் செய்த படங்களை வைத்திருக்கும் அந்த ஸ்டார் யார் தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

kalki 2898 ad

இந்திய சினிமாவில் ஒரு காலத்தில் 100 கோடி வசூலே பெரிய விஷயமாக கருதப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. இப்போதெல்லாம் ரூ 500 கோடி வசூல் கூட எளிதாக கடக்கப்படுகிறது. எனவே தற்போது 1000 கோடி வசூல் என்பதே புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இதுவரை பாகுபலி 2, கேஜிஎஃப் 2, தங்கல், ஜவான், பதான், RRR, கல்கி 2898 ஏடி ஆகிய படங்கள் ரூ.1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளன.

Deepika padukone

ஆனால் 1000 கோடி வசூல் செய்த படங்களில் அதிக படங்களை வைத்திருக்கும் அந்த ஸ்டார் யார் தெரியுமா? அவர் வேறு யாருமில்லை நடிகை தீபிகா படுகோனே. வெறும் 18 மாத இடைவெளியில் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து ஹாட்ரிக் ஹிட்களை வழங்கி உள்ளார். 


Deepika Padukone

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான பதான் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்தார். இந்த படம் உலகளவில் ரூ 1049 கோடி வசூல் செய்தது.. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தில் மீண்டும் ஷாருக்கானுடன் இணைந்து நடித்திருந்தார் தீபிகா படுகோன். இந்த படம் உலகளவில் ரூ 1150 கோடி வசூல் செய்து கடந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. 

Kalki 2898 AD

கடந்த மாதம், நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தில் தீபிகா படுகோன் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவான இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த படம் இதுவரை ரூ.1100 கோடி வசூல் செய்துள்ளது. தீபிகாவின் இந்த 3 படங்களும் சேர்த்து ரூ.2300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளன.

Prabhas sharukh khan

இதன் மூலம் ஷாருக்கான், பிரபாஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி அதிக 1000 கோடி வசூல் படங்களை கொண்ட பிரபலம் என்ற பெருமையை தீபிகா படுகோன் பெற்றுள்ளார்.  ஷாருக்கானிடம் பதான், ஜவான் என்ற 1000 வசூல் படங்கள் இரண்டு உள்ளன. அதே போல் பிரபாஸிடம் பாகுபலி 2, கல்கி 2898 ஏடி என்ற இரண்டு படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!