2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தவர் பூமிகா. அதன் பின்னர் ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் படத்தில் நடித்திருந்தார்.
சிம்ரன், லைலா போன்ற நடிகைகள் கூட சரியான வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில், திருமணத்திற்கு பிறகு கூட அழுத்தமான குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் பூமிகா.
தமிழ் படங்களில் இவரை அதிகம் பார்க்கமுடியாவிட்டாலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
மற்ற மொழி படங்களில் காட்டிய அளவிலான கவர்ச்சியை கூட, தமிழில் இவர் காட்டாதது தான் இவரை தமிழில் பட வாய்ப்புகளை இழக்க வைத்தது.
பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர், தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டாலும், குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.
தற்போது 43 வயதிலும் அழகு சற்றும் குறையாமல்... பளீச் என ஜொலிக்கும் பூமிகா வைரம் போன்ற கல் பதித்த உடைகளில் படு ஜோராக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பூமிகா அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அப்படி தான் 40 வயதை கடந்தாலும் இளமையான தோற்றத்துடன் கிளாமர் குறையாமல் இருக்கும் பூமிகாவின் கியூட் போட்டோஸ் வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.