தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்தவர் அசின். தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
தமிழில் சூப்பர் ஹிட்டான கஜினி பட இந்தி ரீமேக்கில் அமீர்கானுக்கு ஜோடியாக நடிக்க இந்தி திரையுலகிற்கு அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
அமீர்கானைத் தொடர்ந்து சல்மான் கான், அக்ஷய்குமார், அஜய் தேவ்கன் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். அக்ஷய் குமாருடன் நடிக்கும் போது அவர் மூலமாக அவருடைய நண்பரான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் சர்மாவின் அறிமுகம் கிடைத்தது.
முதலில் நட்பாக பழகி வந்த இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் 2016ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அசின் - ராகுல் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது. தனது செல்லமகள் அரினுக்காக அசின் சினிமாவை விட்டு விலகிவிட்டார். மகளை கவனித்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
அசின் தனது செல்ல மகள் அரினின் 3வது பிறந்தநாளை கடந்த 26ம் தேதி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் அசின்.
அத்துடன் தனது மகளுக்கு ஏன் அரின் என பெயரிட்டோம் என்ற ரகசியத்தையும் கூறியுள்ளார். அதாவது தங்களது பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்து பெயர் வைத்ததாக கூறியுள்ளார்.